ஆஸ்திரேலியாவில் மிகவும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்!

1 week

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிலும் விக்டோரியா மாநிலம் மிக மோசமான இறப்பு எண்ணிக்கையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மாநிலத்தின் தலைநகரான மெல்போர்னில் ஆறு வாரங்கள் பூட்டப்பட்ட பின்னர் இந்த உயர்வு நிலை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மெல்போர்னில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி தொடங்கிய ஆறு வார கால முடக்க நடவடிக்கை மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற அச்சமும் உள்ளது.

ஸ்பைக் (Spike) தான் ஆஸ்திரேலியாவில் ஒட்டுமொத்த மரணத்திற்கும் முக்கிய காரணமாக இருக்கின்றது.

 இதையடுத்து கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை விரைவாக சோதிக்க விக்டோரியன் அதிகாரிகள் தயாராக உள்ளனர்.

நோயாளிகள் தனிமைப்படுத்தும் விதிகளை மீறியதால், சரியான நேரத்தில் பரிசோதனை செய்யத் தவறியதால், இந்த நோய் தொடர்ந்து பரவுவதாக கடந்த வாரம், விக்டோரியாவின் அரசாங்கம் கூறியது.

உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால், நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம் சோதனைக்கு உட்படுவது என்று விக்டோரியாவின் முதன்மை மந்திரி டேனியல் அன்ட்ரேவ்ஸ் (Daniel Andrews) கூறினார்.

மேலும் நீங்கள் வெளியில் வேலை செய்வதால் லைரஸ் பரவுகின்றது. ஆகவே நீங்கள் வேலைக்குச் செல்ல முடியாது இதன் விளைவாக மாநிலமே ஒரு மூலையில் தள்ளப்படும். எனவும் குறிப்பிட்டுள்ளா

Read next: ஒரு நிமிடத்திற்கு ஒருவர் என்ற கொவிட் உயிரிழப்புகள் அமெரிக்காவில் பதிவாகின்றது.