பிஹார், அசாமில் வெள்ளம்: 40 லட்சம் பேர் பாதிப்பு

1 week

பிஹார் அசாமில் வெள்ளம் தொடர்ந்து அபாய நிலையில் இருப்பதால், அங்கே சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகாரில் பெய்து வரும் தொடர்மழையால் கண்டகி, பாக்மதி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. இதன் காரணமாக 12 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 40 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 26 குழுக்கள் 3 லட்சம் பேரை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளன..

அசாமில் லகிம்பூர் மட்டும் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Read next: உத்தரப்பிரதேசம் கேரளாவில் ஆகஸ்ட் 24ல் இடைத் தேர்தல்