லோகர் மாகாணத்தில் சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் ஆப்கானிஸ்தானில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

1 week

ஈத் பண்டிகையின்போது தலிபான்கள் அறிவித்த போர்நிறுத்தத்திற்கு முன்னதாகவே இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலுக்கான பொறுப்பை தலிபான்கள் மறுத்துள்ளனர், அதே நேரத்தில் இஸ்லாமிய அரசு இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த தாக்குதல் தற்கொலை குண்டுதாரி நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக லோகரின் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தேதர் லாவாங் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஆளுநர் அலுவலகத்திற்கு அருகில், திருவிழாவிற்கு ஏராளமானோர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த இடத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

ஈத் அல்-ஆதா பயங்கரவாதிகள் மீண்டும் நம் நாட்டு மக்களைக் கொன்றனர் என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் கூறினார்.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸாபிஹுல்லா முஜாஹித் இந்த தாக்குதலால் எந்த பயனும் இல்லை என்று கூறினார்.

ஈத் முதல் நாளான வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் போர்நிறுத்தத்திற்கு தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

 மேலும் தனது 1,000 பாதுகாப்புப் பணியாளர்களுக்கு ஈடாக 5,000 தலிபான் கைதிகளை விடுவிக்கவும் என்று ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசாங்கம் 4,400 க்கும் மேற்பட்ட தலிபான் கைதிகளை விடுவித்துள்ளது, அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை மொத்தம் 1,005 அரசு கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

 

Read next: ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் மனித ஆய்வை ஆரம்பிக்கின்றது