12 வயது இந்திய சிறுமி அர்ஜென்டினா அகோன்காகுவா மலை ஏறி சாதனை!

Feb 15, 2020 05:41 pm

கே ராஜு

அர்ஜென்டினாஇந்தியாவைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன் அர்ஜென்டினாவில் உள்ள தென் அமெரிக்காவின் மிக உயரமான அகோன்காகுவா மலைச் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த மலையின் உயரம் 6,960 மீட்டர் (22,237 அடி). மாபெரும் சாதனை புரிந்த அவரின் வயது 12. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்.

அகோன்காகுவா மலை ஏறி சாதனை புரிந்தபின் காம்யா கார்த்திகேயன் மென்டோசா நகரில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

தெற்கு மற்றும் மேற்கு புவிஅரைக்கோளங்களில் உள்ள மலைகளில் மிகவும் உயரமானது அகோன்காகுவா மலைஇதன் உயரம் 6,960 மீட்டர்.  பல தடைகளைக் கடந்து சாதித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சிகரத்துக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய நேர்மறையான அணுகுமுறை, விடாமுயற்சி ஆகியவை என்னுடைய மற்றொரு வெற்றிகரமான மலையேற்றத்திற்கு வழிவகுத்தது என்று பெருமையுடன் கூறுகிறார் காம்யா.

மேலும், இந்த மலையேற்றம் எனக்கு  மிகவும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. வழியில் நிறைய சிரமங்களும் தடைகளும் இருந்தன.  குறிப்பாகசிகரத்தின் உச்சியை அடையச் செல்லும் இறுதிக்கட்ட பயணம் மிகவும் சவாலாகவும், கடினமாக இருந்தது. மலை மிகவும் செங்குத்தாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக  வானிலையும் மோசமாக இருந்ததால், எங்களது பயணம் தாமதமானது. நீண்ட தூரம் நடக்க வேண்டி இருந்தால் நான் மிகவும் சோர்ந்து போய்விட்டேன். அங்கிருந்து உச்சியை சென்றடைய மனஉறுதி தேவைப்பட்டது.  தன்னம்பிக்கை, விடாமுயற்சியால்தான் என்னால் சாதிக்க முடிந்தது. இந்தச் சிகரம் எனக்கு  நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது என்கிறார் காம்யா.

மலையேறுவதில் ஏற்பட்ட சிரமங்களைக் காட்டிலும் அவர் இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கே கடினமாக போராட வேண்டியிருந்தது.

முதலில், அர்ஜென்டினாவில் மலையேறுவதற்கு காம்யாவுக்கு அவ்வளவு எளிதாக அனுமதி கிடைக்கவில்லை. ஏற்கனவே, இமயமலையில் உள்ள ரூப் குண்ட் (5,020 மீ), மற்றும் சந்திரசீலா (4,000 மீ)  சிகரங்களை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தது, தனது 10வது வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் முகாம் (5,346 மீவரை சென்று அசத்தியதை எடுத்துக்கூறியும் அனுமதி கிடைக்கவில்லை. அவர் சிறுமி என்பதால் அர்ஜென்டினா அரசு அனுமதி வழங்கத் தயங்கியது.

ஆனால் காம்யா சோர்ந்து போகவில்லை. அவரது தந்தை கார்த்திகேயன் நீதி மன்றத்தை அணுகி பயணத்திற்குத் தேவையான அனுமதியை பெற்றார். பின்னர் தான் அவரது வெற்றிகரமான பயணம் துவங்கியது. ஆனாலும் தடங்கல்கள் வேறு வடிவில் வந்தன.

சிகரத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது முகாம்களுக்கு இடையே அவர் பயணித்தபோது, அவரது வழிகாட்டிகள், மலையேற்றத்தைக் கைவிட்டு ஊருக்குத் திரும்புமாறு அவரை கட்டாயப்படுத்தினர். பயணத்தை மேலும் தொடர்ந்தால், உயரத்தில் பயணிக்கும் போது ஏற்படும் சில கடுமையான உடல் உபாதைகள் அவளுக்கு ஏற்படக்கூடும் என அவர்கள் சந்தேகித்ததால் அவளை உடனடியாக திரும்புமாறு வலியுறுத்தினர்.

“துரதிர்ஷ்டவசமாக  அது ஒரு தவறான முடிவு என்கிறார் காம்யா. மருத்துவ பரிசோதனைக்குப்பின் அவரது உடல் மலையேற தகுதியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனது மன உறுதியால் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார் காம்யா.

இவரது தந்தை கார்த்திகேயன் இந்திய கடற்படையில் பணியாற்றுகிறார். கடந்த 2010லிருந்து, இவர் மலையேறுதலில் ஈடுபட்டு வருகிறார், இந்திய கடற்படையை சேர்ந்த ஒரு மலையேறும் குழுவை காமெட் மலை சிகரத்திற்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். தனது தந்தையுடன்தான் காம்யா மலையேறும் பயிற்சி பெற்றார்.

"இந்தியாவில் வெளியே செல்லவும், விளையாடவும்கூட பெண் குழந்தைகள் ஊக்குவிக்கப்படுவதில்லைவீட்டு வேலை செய்வதிலேயே அவர்கள் முடங்கிவிடுகிறார்கள் சிறுமிகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர்கள் இந்த உலகில் பல நல்ல வேலைகளை சிறப்பாக செயல்படமுடியும் என்பதை இச்சாதனை மூலம் தெரிவிக்க விரும்புகிறேன் என்கிறார் காம்யா.

ஒவ்வொருவரிடம் ஒரு சிறப்பும் தனித்துவமும் இருக்கும். தாங்கள் எதற்கான உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வழியில் பயணித்தால் வெற்றி அடையமுடியும் என்று அவர் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

கூடிய விரைவில் நாங்கள் அநேகமாக வட அமெரிக்காவில் இருக்கும் டெனாலியர் மலையில் ஏறிக்கொண்டிருக்கலாம் அல்லது அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாசிஃப் மலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கலாம் என எதிர்கால சவால்களை பட்டியலிடுகிறார் இந்த சாகசப்பெண்.

Read next: கொரோனா வைரஸ் உயிரிழப்பு 560 ஐ கடந்தது.