கென்யாவின் முன்னாள் அதிபா் டேனியல் அராப் மோய் காலமானார்

Feb 05, 2020 05:26 pm

Image Credit; Croes, Rob C.

சுமார் 24 ஆண்டு காலமாக கென்யாவை ஆட்சி செய்த, டேனியல் அராப் மோய், உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பல தடைகளை உடைத்தெறிந்து கடந்த 1978-இல் கென்யாவின் துணை அதிபராக இருந்த டேனியல் அராப் அதிபரானார். தொடர்ந்து, 2002 வரை ஆட்சி செய்தார். அவர் காலத்தில் அரசியல் கொலைகள், துன்புறுத்தல்கள் அதிகரித்து, ஊழல் பெருகியதால் அவர் சர்வாதிகாரி என விமா்சிக்கப்பட்டார். 

Read next: அமெரிக்க ஜனாதிபதியின் உரையை கிழித்தெறிந்த சபாநாயகர்