ஏமன்: சுகாதார சேவைக்காக ஐநா சானாவில் இருந்து விமான சேவை ஆரம்பித்தது

Feb 05, 2020 09:30 am

ஏமனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாடில் உள்ள தலைநகரான சனாவிலிருந்து நேற்று திங்களன்று மருத்துவ சிகிச்சை தேவைப்படும் குறைந்தது ஏழு பேர் மற்றும் அவர்களது உறவினர்கள் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

நோயாளிகளில் பெரும்பாலோர் "புற்றுநோய் மற்றும் மூளைக் கட்டிகள்  போன்ற தீவிரமான நோய்களினால் பாதிக்கப்பட்டோர் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர்" என்றும் அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று WHO ட்விட்டரில் தெரிவித்துள்ளது.Read next: பிரித்தானியாவில் 2035 முதல் பெட்ரோல், டீசல் கார்கள் விற்க தடை