பிரித்தானியாவில் கொரோனா தாக்கி முதல் மருத்துவர் பலி

8 months

புகைப்படம் விளக்கத்துக்கு மட்டும் 

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கியதால் அறுவை சிகிச்சை நிபுணர் ஆடில் எல் டயார் மரணமடைந்தார். முதல் முறையாக என்ஹெச்எஸ்-இல் பணிபுரியும் ஒரு மருத்துவர், கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார்.

சவுதி அரேபியா, சூடான் மற்றும் லண்டனில் உள்ள செயின்ட் மேரி மற்றும் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைகளில் பணிபுரிந்தவர் ஆடில்.

ஆடில், மார்ச் 25 அன்று மேற்கு லண்டன் ஐல்வொர்த்தில் உள்ள வெஸ்ட் மிடில்செக்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் காலமானார். தொற்று ஏற்பட்டதிலிருந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர்  தனிமையில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சூடானுக்கான இங்கிலாந்து தூதர் ஆடிலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 1982-ல் கார்த்தூம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றார், பின்னர் 1996-ல் இங்கிலாந்து சென்று மேற்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார்.

Read next: ஸ்பெயின் இளவரசி கொரோனா தொற்றால் மரணம்