பிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை

9 months

கொரோனா வைரஸ் தொற்றால் பிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும் என அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் செயல்படும் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் நிலைமை மேம்படுவதற்கு முன், மேலும் மோசமாகக்கூடும். தேவைப்பட்டால், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும். பயணக்கட்டுப்பாடுகள், சுகாதார தகவல், மற்றும் அரசின் விதிமுறைகள் குறித்த தகவல்கள் மக்களுக்கு வழங்கப்படும். மருத்துவர் மற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டிப்பாக எதை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்களோ அதை செய்ய நாங்கள் தயங்க மாட்டோம்.

தொடக்கத்திலிருந்து, சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எவ்வளவு கடுமையாக கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறோமா, அவ்வளவு குறைவான உயிரிழப்புகள் நேரும். இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப முடியும். என தனது கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் 30 மில்லியன் மக்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுவரை இங்கிலாந்தில் 1,019 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,089 ஆக உயர்ந்துள்ளது.

Read next: பிரித்தானியாவில் கொரோனா தாக்கி முதல் மருத்துவர் பலி