இங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு!

1 year

புகைப்படம் விளக்கத்துக்கு மட்டும் 

கொரோனா வைரஸ் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால்  பர்மிங்காம் விமான நிலையத்தில் ஒரு தற்காலிக சவக்கிடங்கு தளம் கட்டப்பட்டு வருவதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தேவைப்பட்டால், பர்மிங்காமின் என்..சி மற்றும் மான்செஸ்டரின் ஜி.எம்.எக்ஸ் கண்காட்சி மையங்கள் ஏப்ரல் நடுப்பகுதியில் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன.

சவக்கிடங்கு தளத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, இது ஆரம்பத்தில் 1,500 உடல்களை பாதுக்காக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது புதிய வசதியைக் கொண்டிருப்பதால் பிராந்திய சவக்கிடங்குகள் மூடப்படலாம் என்றும், தற்காலிக தளம் மேற்கு மிட்லாண்ட்ஸில் இறக்கும் அனைத்து நபர்களின் உடல்களை பாதுகாக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை இந்த நோயின் விளைவாக இறப்பவர்களுக்கு எல்லா நேரங்களிலும் மிகுந்த கண்ணியத்தையும் மரியாதையையும் வழங்குவதை உறுதி செய்வதற்கு சரியான வசதிகள் இருப்பது மிக முக்கியம் என்று கூறியுள்ளது.

Read next: அமெரிக்கா: கொரோனா வைரஸின் பாதிப்பை எதிர்த்து போராட 2 டிரில்லியன் உதவித் தொகை.