வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு!

4 months

கொவிட் 19 தொற்றினை நாட்டினுள் கட்டுப்படுத்தும் வரை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

கொவிட் 19 தொற்றினைத் தடுப்பதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக நாட்டினுள் கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கு வெளிநாட்டவர்கள் இலங்கை வருவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருக்கும் மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலுக்காக சென்றுள்ளவர்கள் நாடு திரும்பவதற்கு மேற்கொண்டுள்ள கோரிக்கை தொடர்பில் நாட்டில் கொவிட் 19 முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பரிசீலிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விமான நிலையங்கள் அல்லது பிற இடங்களுக்கு செல்வதன் மூலம் நோய்த் தொற்றுக்குள்ளாகும் அபாயம் காணப்படுவதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் காரணமாக, வெளிநாடுகளில் இருப்பவர்கள் தமது தகவல்களை குறித்த நாட்டில் அமைந்துள்ள இலங்கை தூதரம் அல்லது துணைத்தூதரகத்திற்கு அறியப்படுத்தி பாதுகாப்பாக இருக்குமாறும், நாடு திரும்பும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் ஜனாதிபதியின் வெளியுறவுகள் தொடர்பான மேலதிக செயலளார் அத்மிரல் ஜயநாத் கொலம்பகே கோரிக்கை விடுத்துள்ளார்.

Read next: ஊரடங்குச் சட்ட விதிகளை கடுமையாக்கும் இலங்கை அரசாங்கம்!