78வது பிறந்தநாளை கொண்டடிய ஜோ பைடன்

1 week

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் தனது 78 ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடியதுடன் அமெரிக்காவின் அதிகூடிய வயதான ஜனாதிபதி என்ற வரலாற்றையும் பதிவு செய்ய தயாராகிவருகின்றார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ம் திகதி உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னாள் ஜனாதிபதி ரேகன் ஆகியோரின் ஆரோக்கியத்துடனான வயதுகளை விஞ்சியுள்ளார்.

1981 ஆம் ஆண்டு ரொனால்ட் ரேகன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும்போது அவருக்கு வயது 69 என்பதுடன் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும்போது அவரின் வயது 70 ஆகும்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு 78 வயதாகின்றபோதிலும் அவரது ஆரோக்கியம் சிறந்த முறையில் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதிக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கான வல்லமை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடமையேற்கவுள்ள ஜோ பைடன் 5 அடி 11 அங்குலம் நீளம் என்பதுடன் 178 பவுண்ட்கள் நிறையுடையவர் ஆவார்.

ஜோ பைடன் புகைத்தல்,மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கங்கள் இல்லாதவர் என்பதுடன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நோக்கில் வாரத்தில் 5 நாட்களில் கடுமையான உடற்பயிற்சி செய்பவராவார்.

தம்முடைய உடல்நலம் குறித்த தகவல்கள் அனைத்தும் வெளிப்படையாக வெளியிடப்படும் என ஜோ பைடன் ஆதரவாளர்கள் மத்தியில்  ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்

அமெரிக்காவில் கடந்த 3 ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதுடன் 270 க்கும் மேற்பட்ட ஆசனங்களையும் தன்வசப்படுத்தியிருந்தவர்.

எனினும் தேர்தல் முடிவுகளில் திருப்தியுறாத ட்ரம்ப் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தமக்கான வெற்றிவாய்ப்புக்கள பறிக்கப்பட்டதாகவும் குற்றுஞ்சாட்டியுள்ளனர்.

தோல்வியை ஒப்புக்கொள்ளாத டொனால்ட் ட்ரம்ப் வாக்கு எண்ணப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவருகின்றார்.

Read next: ஜோர்ஜியாவில் பெரும் வாக்காளர் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ட்ரம்ப் தனது கருத்துக்களை சனிக்கிழமையும் தொடர்ந்தார்.