7 வயது சிறுவன் 30 நிமிடத்தில் 105 முக்கோண வடிவிலான கனசதுர புதிருக்கு தீர்வு கண்டு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை!

Sep 14, 2021 12:30 pm

சென்னை கொளத்தூரை சேர்ந்த 7 வயது சிறுவன் சூர்ய பிரசன்னா 30 நிமிடத்தில் 105 முக்கோண வடிவிலான கனசதுர புதிருக்கு தீர்வு கண்டு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியில் படிக்கும் சூரிய பிரசன்னா 5 கின்னஸ் சாதனை படைத்த இளையராம் சேகர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி மேற்கொண்டு ஆசிய புக் ஆப்  ரெக்கார்டில் சாதனை படைத்துள்ளார்.

சென்னை கொளத்தூர் எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சியில் 7 வயது சிறுவன் சூரிய பிரசன்னா 30 நிமிடத்தில் 105 முக்கோண வடிவிலான ரூபி கனசதுர புதிருக்கு தீர்வு கண்டு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார்.

மேலும் தான் அடுத்த இலக்கு கின்னஸ் சாதனை படைப்பதே எனது நோக்கம் எனவும் எனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்க்கும் என்னுடைய பெற்றோருக்கும் மற்றும் பள்ளி தலைமைக்கும்  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்த சிறுவன் சூரிய பிரசன்னா தெரிவித்தார்.


Read next: கொரோனா விழிப்புணர்வு அறிவியல் கண்காட்சி!