சுவிற்சர்லாந்தில் சோகம் - பட்டன் பேட்டரிகளை விழுங்கியதால் உயிரிழந்த சிறுவன்

Jan 21, 2023 08:12 pm

சுவிற்சர்லாந்தில் பட்டன் பேட்டரிகளை விழுங்கியதால் ஏழு வயது சிறுவன் ஜோஸ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகலில் விடுமுறையைக் கழித்த ஜோஸ் பட்டன் பேட்டரிகளை விழுங்கியதை தொடர்ந்து போர்த்துகீசிய நகரமான கோயம்ப்ராவில் உள்ள மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டிருந்த நிலையில்  உயிரிழந்தார்.

பட்டன் பேட்டரிகளை விழுங்கியதால் உள் காயங்களுக்கு உள்ளான சிறுவன் உயிரிழந்தார்.

பெயர்ன் ஆரம்பப் பாடசாலையின் இயக்குனர் சேவியர் நிகோட், மரணத்தை உறுதிப்படுத்தினார்.  இந்த மரணம் தனிப்பட்ட சூழலில் நிகழ்ந்ததாக நிகோட் கூறினார். 

இந்த கொடூரமான நிகழ்வால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், அனைவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

கிறிஸ்துமஸ் அன்று இந்த விபத்து நடந்தது. ஜோஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், பேட்டரி ஏற்கனவே உள் காயங்களை ஏற்படுத்தியது.

அறுவைசிகிச்சை நிபுணர்களால் பேட்டரியை அகற்ற முடிந்தது, ஆனால் என் மகன் வாஸ்குலிடிஸ் (இரத்த நாளங்களின் அழற்சி) காரணமாக இறந்தார், என்று அவரின் தாய் கூறுகிறார்.

இந்நிலையில், சகோதரியும் பெற்றோரும் செவ்வாய்க்கிழமை சிறுவனை ஜாம்புஜால் கல்லறையில் அடக்கம் செய்தனர்.

இதேவேளை, பட்டன் பேட்டரிகளை விழுங்குவது தொடர்பாக ஆண்டுக்கு 80 முதல் 90 விசாரணைகளைப் பெறுகிறது. சிறு குழந்தைகள் குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர். 

80 முதல் 95 சதவீத குழந்தைகளுக்கு எந்த அறிகுறியும் இல்லை, மேலும் 24 முதல் 96 மணி நேரம் கழித்து பேட்டரிகள் மலத்தில் வெளியேற்றப்படுகின்றன” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read next: நெதன்யாகு நீதித் திட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் எதிர்ப்பு