அர்ஜெண்டினாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

May 11, 2022 05:32 am

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 4.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஜூஜூய் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது.

சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Read next: நமக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் விளக்கும் எளிய கதை