லண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்

7 months

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதால், லண்டனில் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக லண்டன் நகரில் அண்டர்கிரவுண்ட் ரயில் நெட்வொர்க்கின் 40 ரயில் நிலையங்கள் இன்று மூடப்படுகின்றன.

இரவு சேவைகள் இருக்காது, பஸ் சேவைகளும் குறைக்கப்படும் என்றும்  டி.எஃப்.எல் தெரிவித்துள்ளது.

லண்டன் ஓவர் கிரவுண்ட், டி.எஃப்.எல் ரயில், டி.எல்.ஆர் மற்றும் தெற்கு லண்டனில் உள்ள டிராம் நெட்வொர்க் ஆகியவை இதில் அடங்கும்.

ஏற்கனவே, வியாழக்கிழமை அன்று, ரயில் சேவையை ஓரளவு நிறுத்துவதாக லண்டன் போக்குவரத்து (டி.எஃப்.எல்) அறிவித்தது. இதைத் தொடர்ந்து லண்டன் அண்டர்கிரவுண்டு நெட்வொர்க்கில் பயணிகள் பயணிப்பது ஓரளவுக்கு குறைந்தது.

வெள்ளிக்கிழமை முதல், வாட்டர்லூ மற்றும் சிட்டி லைன் முழுவதுமாக மூடப்படும். திங்கள்கிழமை முதல் டிஎஃப்எல் தனது நெட்வொர்க்கின் மற்ற ரயில் சேவைகளை படிப்படியாகக் குறைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள வழித்தடங்கள்:

பேக்கர்லூ லைன்: லம்பேத் நோர்த், ரீஜண்ட்ஸ் பார்க், வார்விக் அவென்யூ, கில்பர்ன் பார்க், சேரிங் கிராஸ் சென்ட்ரல் லைன்: ஹாலண்ட் பார்க், குயின்ஸ்வே, லான்காஸ்டர் கேட், சான்சரி லேன் மற்றும் ரெட் பிரிட்ஜ் சேவைகள்.

சர்க்கிள் லைன்: பேஸ்வாட்டர், கிரேட் போர்ட்லேண்ட் ஸ்ட்ரீட் மற்றும் பார்பிகன் டிஸ்ட்ரிட் லைன்: போ சாலை, ஸ்டெப்னி கிரீன், மேன்ஷன் ஹவுஸ், டெம்பிள், செயின்ட் ஜேம்ஸ் பார்க் மற்றும் க்ளோசெஸ்டர் சாலை.

ஜூபிலி லைன்: சுவிஸ் காட்டேஜ், செயின்ட் ஜான்ஸ் வூட், பெர்மாண்ட்சே, மற்றும் சவுத்வாக்.

நார்தர்ன் லைன்: டஃப்னெல் பார்க், சாக் பார்ம், மார்னிங்டன் க்ரசென்ட், கூட்ஜ் தெரு, போரோ, கிளாஃபம் சவுத், டூட்டிங் பெக், சவுத் விம்பிள்டன், மற்றும் ஹாம்ப்ஸ்டெட்.

பிக்காடில்லி லைன்: கலிடோனியன் சாலை, அர்செனல், கோவன்ட் கார்டன், ஹைட் பார்க் கார்னர், பவுண்ட்ஸ் கிரீன், மற்றும் மேனர் ஹவுஸ் விக்டோரியா லைன்: பிம்லிகோ, பிளாக்ஹார்ஸ் சாலை

இந்த ரயில் நிலையங்கள் மூடப்படுவது தொடர்பான தகவல்களை தங்களது அதிகாரபூர்வமான வலைத்தளத்தில் பார்த்துக்கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இங்கிலாந்தின் பிற பகுதிகளை விட லண்டனில் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் பார்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.

Read next: இத்தாலியில் 72 மணிநேரத்தில் கட்டப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான மருத்துவமனை!