பிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை!

1 year

தனியார் வாடகைதாரர்களை வெளியேற்றுவதிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் அவசரகால சட்டத்தை முன்வைக்கும் என்று போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார. இந்த சட்டம் குறைந்தது  மூன்று மாதங்கள் அமுலில் இருக்கும் என்று தெரிய வருகிறது. அதே வேளையில் வீட்டு உரிமையாளர்கள் வீட்டுக்கடன் செலுத்த முடியவில்லை என்றால் மூன்று மாதங்கள் அதை செலுத்துவதில் இருந்து விடுமுறை கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் பொழுது, வாடகை தாரர்கள்  நோய்வாய்ப்பட்டால் அவர்கள் வாடகை செலுத்த முடியாமல் போகலாம் என்று தொழிலாளர் தலைவர் ஜெர்மி கோர்பின் பிரதமரின் கேள்வி ஏழுப்பினார் . மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் வாடகை வீட்டில் இருப்போருக்கு  பலவற்றைச் செய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது.

பிரித்தானியாவில் 20 மில்லியன்  தனியார் வாடகைதாரர்கள் நோய்வாய்ப்பட்டால், ஊதியத்தை இழந்தால் அல்லது சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டுமானால் ஊதியப் பணம் வராமல் நின்றுவிடும் என்று  கவலைப்படுகிறார்கள் என்று கூறினார்.

திரு ஜோன்சன், இதற்கு பதிலளிக்கையில் தனியார் வாடகைதாரர்களை வெளியேற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சட்டத்தை முன்வைக்கப்டும் என்றும் அதேவேளையில் மற்றைய விடயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார். 

 

Read next: ஐரோப்பிய மத்திய வங்கி €750 பில்லியன் நிதி உதவி