மெக்சிகோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழப்பு

Sep 22, 2022 10:03 pm

மெக்சிகோ தலைநகரில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர், கட்டிடங்களுக்கு சேதம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

மேற்கு மற்றும் மத்திய மெக்சிகோவில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, நேற்று அதிகாலை 1 மணிக்கு (06:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது, 

மெக்ஸிகோ நகர மேயர் Claudia Sheinbaum ட்விட்டரில், இரண்டு பேர் இறந்தனர்.ஒரு பெண் தனது வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார், ஒரு ஆண் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் நில அதிர்வு எச்சரிக்கை ஒலி எழுப்பியதால் குடியிருப்பாளர்கள் தெருக்களில் குவிந்தனர்.

திங்கட்கிழமை போன்று வியாழன் நிலநடுக்கம் பசிபிக் கடற்கரைக்கு அருகில் உள்ள மேற்கு மாநிலமான மைக்கோவாகனில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மைக்கோகானின் அகுயில்லாவிலிருந்து தென்மேற்கே 46 கிமீ (29 மைல்) தொலைவில் 24 கிமீ (15 மைல்) ஆழத்தில் இருந்தது.

இந்த நிலநடுக்கம் மாநிலம் முழுவதும் உணரப்பட்டதாக மைக்கோகன் மாநில அரசு தெரிவித்துள்ளது. உருவாபன் நகரில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மைக்கோகன் மற்றும் குரேரோவை கடற்கரையுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read next: ஷேல் கேஸ் தயாரிப்பதற்கான தடையை நீக்கிய இங்கிலாந்து