சர்வதேச விமான போக்குவரத்து சீராக குறைந்தது 4 ஆண்டுகள் தேவைப்படும்

1 week

சர்வதேச விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைய குறைந்தது 4 ஆண்டுகள் தேவைப்படும்.

280 க்கும் மேற்பட்ட விமானங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) இந்த தகவலை தெரிவித்துள்ளது. 

2024 ஆம் ஆண்டுக்கு பின்பு தான் கொரோனாவுக்கு முந்தைய நிலையை சர்வதேச விமான போக்குவரத்து அடையும். 

முன்னதாக கடந்த மே மாதத்தில் சர்வதேச விமான போக்குவரத்து 91 சதவிகிதம் குறைந்திருந்தது. அவை 86.5 என்ற அளவில் ஜூன் மாதம் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஆனாலும் நிலைமை முழுவதும் சீரமைய குறைந்தது 4 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

IATA தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸாண்ட்ரே டி ஜூனியாக், மூடிய எல்லைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலைகள் ஒரு முழுமையான அடைப்பின் அதே விளைவைக் கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

Read next: அரசாங்கத்துடன் சமாதானமாக செல்ல யேமனின் தெற்கு பிரிவினைவாதிகள் ஒப்பந்தம்