மெல்போர்னில் கொரோனாவை சமாளிக்க மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் அவசர குழுக்கள்

1 week

கொரோனா வைரஸின் மோசமான தாக்குதலை கட்டுப்படுத்த உதவும் வகையில், மெல்போர்ன் நகரில் உள்ள வயதானவர்கள் பராமரிப்பு இல்லங்களுக்கு, பேரழிவு மண்டலங்களுக்கு அனுப்பப்படும் பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ குழுக்களை ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளது.

சிட்னியில், கொரோனா தொற்று காரணமாக, பிரதமர் ஸ்காட் மோரிசனின் மூத்த ஆலோசகர் சுய-தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் பிரதமர் தொடர்ந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிட்னியிலிருந்து குயின்ஸ்லாந்துக்குள் மக்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது பிரிஸ்பேனின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் பூட்டப்பட்டது.

ஆஸ்திரேலியா மற்ற நாடுகளை விட மிகக் குறைவான கொரோனா வைரஸ் தொற்றை பதிவு செய்துள்ளது,

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் சமூகம் பரவல் ஏற்பட்டுள்ளதால் சுகாதார அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

விக்டோரியாவில் உள்ள வயதான பராமரிப்பு இல்லங்களில்  உள்ளவர்களில், தொழிலாளர்கள் உட்பட 804 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளன என மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறினார்.

சுமார் 49 பேர் இறந்துள்ளனர். என்று ஆஸ்திரேலியாவின் சுகாதார செயலாளர் பிரெண்டன் மர்பி கூறினார்.

ஒரு இல்லத்திலிருந்து, பலர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மற்றும் சுயமாக தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்களை கவனிக்க இராணுவ மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

நியூ சவுத்வேல்ஸில் 3,529 பேர் பாதித்துள்ளனர்.

 விக்டோரியாவின் 13 வயதானவர்கள் பராமரிப்பு இல்லங்களின் நிலைமை கண்டு தான் மிகவும் வருந்துவதாக மோரிசன் கூறினார். பெரும்பாலான இல்லங்களில் தொழிலாளர்களிடமிருந்து தான் தொற்று பரவியுள்ளது. அவர்களில் பலருக்கு வைரஸ் இருப்பதை அறியவில்லை.

தொடர்பு தடமறிதல் உள்ளிட்ட வயதான பராமரிப்பு சிக்கல்களைச் சமாளிக்க அரசு 1,400 ராணுவ வீரர்களையும் ஐந்து அவசரக் குழுக்களையும் மெல்போர்னுக்கு அனுப்பியுள்ளது.

விக்டோரியாவில் ஏற்பட்டுள்ள தொற்று அலை தேசிய பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கிறது என்று மோரிசன் ஒரு தொலைக்காட்சி ஊடக மாநாட்டில் கூறினார்.

Read next: இந்திய பொருளாதாரம் பழைய நிலையை எட்ட 2 ஆண்டுகள் ஆகும்