கூகுளின் 200,000 ஊழியர்கள் 2021 ஜூலை வரை வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவு

1 week

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கூகுள் தனது 200,000 ஊழியர்களை குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு ஜூலை வரை வீட்டிலிருந்தே பணிபுரியவைக்கும் என தெரிய வந்துள்ளது.

கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, உயர் அதிகாரிகளின் குழுவுடன் விவாதித்தபின் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கான மின்னஞ்சலில், பிச்சாய் கூறியதாவது: ஊழியர்கள் முன்கூட்டியே திட்டமிடுவதற்காக, அலுவலகத்தில் இருக்கத் தேவையில்லாத பணியாளர்கள் 2021 ஜூன் 30 வரை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்கிறது. என்றார்.

இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் உலகளவில் அதிகமான அலுவலகங்களை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக கூகுள் முன்னர் கூறியிருந்தது. ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதி வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய விரும்பியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பல தொழில்நுட்ப நிறுவனங்கள், 2020 இறுதிவரை பெரும்பாலான அல்லது அனைத்து ஊழியர்களையும் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்பதாக அறிவித்தன.

மே மாதத்தில், ட்விட்டர் மற்றும் ஸ்கொயர் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி, இரு நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களிடம், வீட்டிலிருந்து நிரந்தரமாக பணி செய்யுமாறு கூறினார். தேவைப்படுபவர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வேண்டியிருக்கும் என்றார்.

எங்கள் மக்கள் மற்றும் சமூகங்களின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து முதலிடம் கொடுப்போம். என ட்விட்டர் கூறியுள்ளது.

ஃபேஸ் புக் நிறுவனம், ஜனவரி 1, 2021 வரை தொலைதூரத்தில் பணிபுரிய ஒப்புதல் அளித்து, அவர்களின் சம்பளம் உள்ளூர் செலவைப் பிரதிபலிக்கும் வகையில் சரிசெய்யப்படும் என்றும் அறிவித்தது.

இதுவரை குறைந்தது ஏழு அமேசான் கிடங்கு ஊழியர்கள் கொரோனாவால் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது.

தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆப்பிள், கடந்த மாதம் தனது ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்புமாறு ஊழியர்களைக் கேட்டுக்கொண்டது.

ஆனால் தற்போது ஆப்பிள் தனது தொழிலாளர்களிடம் அடுத்த ஆண்டு வரை அலுவலகங்களுக்கு அனைவரும் வர வேண்டியதில்லை என்று கூறியுள்ளது.

தனது நூற்றுக்கணக்கான சில்லறை கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை தொலைதூரத்தில் இருந்து வேலை செய்யவும் கூறியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் உபெர் போன்ற தொழில்நுட்ப மையங்களில் 66 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது நிரந்தரமாகிவிட்டால் முக்கிய நகரங்களிலிருந்து அவர்கள் விலகிச் செல்வார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கூகுள் மற்றும் பேஸ்புக் இருவரும் தங்கள் அலுவலகங்களை மீண்டும் திறந்தபின் அலுவலக அளவை 30 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க திட்டமிட்டுள்ளன.

Read next: கொரோனா தடுப்பூசி உற்பத்தி: ஃபுஜிஃபில்ம் நிறுவனத்திற்கு $265 மில்லியன் ஒப்பந்தம் வழங்கிய அமெரிக்கா