நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு அஸ்ராஸெனெக்கா 6 பில்லியன் முதலீடு

2 weeks

நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு அஸ்ராஸெனெக்கா 6 பில்லியன் முதலீடு

முன்னணி மருந்து உற்பத்தியாளரான அஸ்ராஸெனெக்கா நுரையீரல் மற்று மார்பக புற்றுநோய்க்கான ஜப்பானின் புதிய சிகிச்சைக்காக 6 பில்லிய் அமெரிக்க டொலர்களை வழங்க இணங்கியுள்ளது.

டோக்யோவை தளமாகக்கொண்ட டய்ச்சி சன்க்யோ உடன் அஸ்ராஸெனெக்கா இணைந்து டீ.எஸ் 1062 (DS-1062) என்ற மருந்தை மேம்படுத்த உள்ளது.

அஸ்ராஸெனெக்கா முற்பணமாக 1 பில்லியன் டொலரையும் ஒழுங்குப்படுத்தல் அனுமதிக்காக ஒரு பில்லியன் ரூபாவையும் விற்பனை இலக்கு எட்டும்  பட்சத்தில் அதற்காக 4 பில்லியன் டொலர்களை வழங்கும். ஜப்பானில் இந்த மருந்தை விற்பதற்கு தனித்துவமான உரிமையை  டய்ச்சி பெற்று இருக்கும்.

இந்த புதிய சிகிச்சை முறையானது முழு உடலையும் சிகிச்சைக்கு உட்படுத்தாமல் பாதிக்கப்பட்டுள்ள நுரையீரல் மற்றும் மார்பகத்திற்கு மாத்திரம் இந்த சிகிச்சையின் மூலம் கீமோரெப்பி வழங்கப்படும்.

என்றாலும் இந்த மருந்திற்கான அனுமதி எந்த நாட்டிலும் கொடுக்கப்படவில்லை என்பதுடன், இதன் பாதுகாப்பும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த இரு நிறுவங்களும் ஒன்றிணைந்து செயல்படுவது இது முதல் சந்தர்ப்பம் அல்ல.

கடந்த வருடம் மார்ச் மாதம் இதேபோன்று ஒன்றிணைந்து என்ஹேர்ட்டு எனும் மார்பக புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பு செயற்பாடகளை ஆரம்பித்தன.

டய்ச்சியுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த அஸ்ரஸெனெக்கா பிரதம அதிகாரி பஸ்கால் சொரியோட், என்ஹேர்ட் தயாரிப்பின் ஊடாக வெற்றிகரமான தலைமைத்துவத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட பல்கலைக்கழகத்துடன் இணை;ந்து கொரோனா வைரஸிக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் அஸ்ரஸெனெக்கா ஈடுபட்டமையினால் அதன் பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ உலகில் . எம் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட நோவாசிட்  பல்வேறு கொரோனா வைரஸ் பரிசோதனை உபகரணங்களை தயாரிக்கும் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் கொவிட்-19 பரிசோதனைகளின் முன்னணி     விநியோகஸ்தராக தன் நிலையை ஸ்திரப்படுத்திக்கொண்டதனால் நோவாசிட் பங்குச்சந்தையின் செல்லக்குழந்தையாக உள்ளது.

ஸிக்கா, இபொல்லா மற்றும் சார்ஸ் போன்வற்றிற்கான மருத்துவ உபகரணங்களை நோவாசிட் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனத்தில் பெரும்பாலான செயற்பாடுகள் ஐக்கிய இராஜ்ஜியத்தில்

மேற்கொள்ளப்படும் நிலையில் சவுத்தம்டனில் கொவிட் 19ற்கான மருத்துவ உபகரண தாயரிப்பு இடம்பெறுகின்றது.

 

Read next: கூட்டாட்சிப் படைகளை அனுப்புவதை நிறுத்துமாறு 6 அமெரிக்க மேயர்கள் கோரிக்கை