டிக்-டோக் வீடியோவால் ஐந்து பெண்களுக்கு கிடைத்த தண்டனை

1 week

Photo: பிரதிநிதித்துவ புகைப்படம் 

சமூக ஊடகங்களில்  பொது ஒழுக்கங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து பெண்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து எகிப்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹனீன் ஹோசம், மொவாடா அல்-ஆதாம் ஆகியோக்கு எதிராகவும் மற்றும் டிக்டோக்கில் வீடியோ காட்சிகளை வெளியிட்ட மேலும் மூன்று பேர் உட்பட 5 பெண்களுக்கே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரதிவாதிக்கும் 300,000 எகிப்திய பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில், கெய்ரோ பல்கலைக்கழக மாணவியான ஹனீன் ஹோசம், வீடியோ மூலம் ஆண்களைச் சந்திக்கவும் அவர்களுடன் நட்பை வளர்க்கவும் இளம் பெண்களை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மற்றவரான மவாடா அல்-ஆதாம் இரண்டு மில்லியன் பின் தொடர்பவர்களைக் கொண்ட டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்திய சமூக ஊடகங்களில் அநாகரீகமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஹோசாம் மற்றும் அல்-ஆதாம் ஆகியோர் தங்கள் சமூக ஊடக கணக்குகளை நிர்வகிக்க உதவியதாக மற்ற மூன்று பெண்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

அல்-ஆதாமின் வழக்கறிஞர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளார்.

Read next: இரண்டாம் போர் வந்தால் எம்மை யாரும் தடுக்க முடியாது! மார்தட்டும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்