கோவிட் -19 நீரிழிவு நோயாளிகள் மீது ஏன் அதிகளவிலான ஆபத்தை ஏற்படுத்துகின்றது….?,

2 weeks

கோவிட் -19 உலகளாவிய ரீதியில் பரவத் தொடங்கியதில் இருந்து, தொற்று நோயியல் ஆராய்ச்சியாளர்களும்ஊடகவியலாளர்களும், மருத்துவத் துறைப் பேராசிரியர்களும்  ஆய்வுகளை மேற்கொண்டும், பல்வேறு தகவல்களைத் திரட்டியும் பெற்ற அறிக்கைகளில் இருந்து அமெரிக்காவில் அதிகளவிலான நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கான பல அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் திடீரென அலையெனத் தோன்றி மிகவேகமாகப் பரவிய நோயின் தாக்கத்தின் விளைவு தொடர்பாக அமெரிக்காவின் புதிய அரசாங்கம் மேற்கொண்ட ஆய்வில்   கோவிட் -19 நோய்த் தாக்கத்தினால் இறந்தவர்களில் சுமார் 40விகிதம் பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி முதல் மே மாதம்  வரை அமெரிக்காவின் 15 மாநிலங்கள் மற்றும் நியூயார்க் நகரங்களில் 65 வயதிற்குட்பட்டவர்களின் இறப்புக்களில், 10,000க்கும் அதிகமான மரணங்கள் தொடர்பாகஅமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்ஆய்வு செய்தன. இந்த ஆய்வை வழிநடத்திய சி.டி.சி தொற்றுநோயியல் நிபுணரான ஜொனாதன் வோரின் ஆய்வின்படி, நீரிழிவு நோயாளிகளுக்கும், அவர்களுடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் இந்நோய் மிகக் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.  ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் அமெரிக்காவின் 12 மாநிலங்களிலும், கொலம்பியா மாவட்டத்திலும் கோவிட் -19 நோயால் இறக்கும் மக்களிடையேயும் இதேபோன்ற உயர் நீரிழிவு விகிதம் கண்டறியப்பட்டது.

கலிஃபோர்னியா, அரிசோனா மற்றும் மிச்சிகன் உள்ளிட்ட பத்து மாநிலங்கள் இதுவரை நீரிழிவு நோய் மற்றும்  அடிப்படை நிலைமைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கவில்லை என்றும், மீதியுள்ளவை இது தொடர்பாகப் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலானது, கொள்கை வகுப்பாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் மிகவும் ஆபத்தில் உள்ள நோயாளர்களைப் பாதுகாக்க போராடவேண்டும் என்ற நோக்கத்தை அடைவதற்கு ஒரு முழுமையற்ற  விபரத்தையே அளித்துள்ளது. அமெரிக்காவில்  நீரிழிவு நோயால் இறக்கின்றவர்களின் விகிதம் 2009 முதல் அதிகரித்து வருகிறது மற்றும் ஏனைய கைத்தொழில்மய நாடுகளை விடவும், இத்தொகை அதிகமாக உள்ளது. அதேவேளை வெள்ளையர்களை விட கறுப்பினத்தவர்களும், லத்தோனியர்களுமே  அதிகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடையே அதிகளவிலான கோவிட் -19 நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நீரிழிவு நோய் ஏற்கனவே மெதுவாக நகரும் தொற்றுநோயாக இருந்தது. இப்போது கோவிட் -19 வேகமாக நகரும் அலைபோல நொருங்கிவிட்டதுஎன்று மருத்துவப் பேராசிரியரும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் நாள்பட்ட நோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கைக்கான மையத்தின் இயக்குநருமான எல்பர்ட் ஹவாங் கூறினார்.

வைரஸ் பாதிப்புக்களின்  ஆபத்துக்களின் மத்தியிலும், அத்தியாவசியமான மருந்துப் பொருட்களை வாங்குவதற்கான, இன்சுலின் மருந்தின் அதிக விலை காரணமாக சிலர் தொடர்ந்தும் தமது பணிகளைச் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பினால், நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தங்கள் வேலைகளையும் மட்டுமல்லாது, தொழில் வழங்குநர்களினால் வழங்கப்படும் சுகாதாரக் காப்பீட்டையும் இழந்துவிட்டனர்.

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் அகஞ்சுரக்கும் சுரப்பியல் நிபுணரும் நீரிழிவு ஆராய்ச்சியாளருமான    . என்ரிக் கபல்லெரோ மேலும் இது தொடர்பாக விளக்கிக் கூறுகையில் .

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணர்த்துவதற்கும், அது தொடர்பாக விளிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மருத்துவமனைக்கு வருகை தருவதில் அவர்களிடம் உள்ள அச்சத்தை நீக்குவதற்கும், சுகாதார அதிகாரிகள் அதிகம் கவனம் செலுத்தியிருக்கவேண்டும், அதே நேரத்தில் நோயாளிகள், தமது வீடுகளிலேயே இருந்து தங்கள் நோய் நிலைமையை நிர்வகிக்க உதவுவதில் அதிக கவனம் செலுத்தவும் வேண்டும்என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட் -19 தொற்று, நீரிழிவு நோயாளிகளுக்கே அதிகளவில்  ஆபத்தை ஏற்படுத்தும் என்று கொள்கை வகுப்பாளர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இருந்தது. குறிப்பாக 2003 ஆம் ஆண்டில், SARS அல்லது கடுமையான சுவாச நோய்க்குறி என அழைக்கப்படும் ஒரு கொரோனா வைரஸின் திடீர் அதிகரிப்பினால் இறந்தவர்களில் 20விகிதத்திற்கும் அதிகமானவர்களுக்கு நீரிழிவுநோய் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று 2009 ஆம் ஆண்டில், எச் 1 என் 1 காய்ச்சல் தொற்று நோய்களின் போதும், நீரிழிவு நோயாளிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், 2012 இல், கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு சுவாச நோய் அறிகுறிகள் அல்லது மெர்ஸ் தீவிரமாகப் பரவியபோது, மேற்கொண்ட ஒரு ஆய்வில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில்  அல்லது மரணமடைந்தவர்களில் 60 விகிதம்  நோயாளிகளுக்கு நீரிழிவு நோய் இருப்பதும் கண்டறியப்பட்டது.

அதிகளவிலான அவசர அறை வருகைகள், ஊனமுற்றோர், பார்வை இழப்பு, சிறுநீரக நோய் மற்றும் டயாலிசிஸ் மேற்கொள்ளல் போன்ற மறைமுகமாக நீரிழிவு தொடர்பான சிக்கல்களை மேலும் அதிகரிப்பதற்கு கொரோனா வைரஸ் தொற்று வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நோயின் தாக்கம் முடிந்தவுடன்  சுனாமிபோன்ற பாரிய அளவிலான பிரச்சினைகைளைக் காணப்போகின்றோமோ  என்றும் அச்சமடைகின்றேன் என சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியருமான அண்ட்ரூ போல்டன் கூறினார்.

நீரிழிவு நோய்க்கும் கொரோனா வைரசுக்கும் இடையிலான தொடர்புகளில் உள்ள சிக்கல்களை அவிழ்க்க ஆராய்ச்சியாளர்கள் பல மாதங்களாக துருவித் துருவி ஆராய்ந்து,அந்த வைரசுகளின் பாதிப்புகளின் வரிசை ஒழுங்கைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ் ஏற்கனவே பலவீனமாக இருந்த உறுப்புகளான இதயம்,நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களைக் குறிவைத்துத் தாக்குவதுடன், நீரிழிவு நோயாளிகளில் பலரில் அதிகளவிலான பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. கோவிட் -19 மேலும் வயதானவர்கள், பருமனானவர்கள் அல்லது உயர் குருதி அமுக்கம் உள்ளவர்களில் மரணத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு இறந்தவர்களிலும் பலருக்கு நீரிழிவு நோயும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளில் காணப்படும் அதிகளவிலான குளுக்கோஸ் மற்றும் லிப்பிட் எண்ணிக்கைகள்சைட்டோகைன் புயலைதூண்டக்கூடும், நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி, குருதிக் கலன்களில் ஒரு பாதுகாப்பு வலயமாக உள்ள எண்டோதெலியல் ((Endothelial)) கலங்களைச் சேதப்படுத்தும். வெண்குருதிச் சிறு துணிக்கைகள், வைரஸைத் தாக்க விரைவதால் குருதிக் கலன்களின் வீக்கத்திற்கும் வழிவகுக்கும், மேலும் அவற்றில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கட்டிகளயும் உருவாக்கக்கூடும் என்று ஆராய்ச்சிகள் மூலம் அறியவருகின்றது. அவற்றின் பாதிப்புகளால், குருதியில்  வெல்லத்தின் அளவும் அதிகரிக்கின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தலாம் அல்லது முக்கிய உறுப்புகளைச் சேதப்படுத்தலாம்.  கோவிட் -19 ரைசுக்கள், அதிகளவிலான குருதிவெல்லம் உள்ள சூழலில் நன்கு வளர்ச்சியடைந்து பெருகுகின்றன. இந்த வைரசுகள், நீரிழிவு நோயின் அறிகுறிகளில் மேலும் புதிய இதுவரை கண்டறியப்படாத அறிகுறிகளைத் தூண்டக்கூடும் என்றும், அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அலபாமாவின் மாண்ட்கோமரியில் உள்ள நுரையீரல் நிபுணர் டேவிட் திராசர், தனது உள்ளூர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில்  உள்ள ஊழுஏஐனு-19 நோயாளிகளில் பாதிப்பேர் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.  இந்த தொற்றுநோயின் காரணமாக, தென் மாநிலங்கள் பலவற்றில், மிக உயர்ந்த நீரிழிவு விகிதங்கள் காணப்படுகின்றது.. இதுதொடர்பாக ரொய்ட்டர்ஸ் மேற்கொண்ட ஆய்வில், கோவிட் -19 இறப்புகளில் கிட்டத்தட்ட 40 விகிதம் அலபாமா, லூசியானா, மிசிசிப்பி, வட கரோலினா, தென் கரோலினா மற்றும் மேற்கு வேர்ஜீனியாவில் உள்ள நீரிழிவு நோயாளிகள் எனக் குறிபிடப்பட்டுள்ளது.இந்த பகுதியின் பெரும்பகுதி சி.டி.சி நீரிழிவு பெல்ட் என்று அழைக்கப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளில் 13.2மூ அல்லது 550,000 க்கும் அதிகமானோர் அலபாமாவிலேயே  உள்ளனர் என்றும் சிடிசி தரவுகள் காட்டுகினறன. இந்த மாநிலத்தில், கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட கோவிட் -19 நோயினால் ஏற்பட்ட இறப்புகளில் 38மூ பேர் நீரிழிவு நோயாளிகள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாநிலங்களில் உள்ள மருத்துவ வல்லுநர்கள், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கக் கடுமையாகப்  போராடுகிறார்கள். அதேவேளை வழக்கமான  நேரடிச் சந்திப்புகளையும் இரத்து செய்யும் போது, அல்லது சந்திப்புக்கள் மட்டுப்படுத்தப்படும் போது, இவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என்றும் கூறுகிறார்கள்.

அலபாமாவின் மாண்ட்கோமரியில் குறைந்த வருமானம் உடைய ஊழுஏஐனு-19 நோயாளிகளில் நீரிழிவு நோய் பொதுவாகக் காணப்படுகின்றது என்று கூறினார். மருத்துவச் சிகிச்சைகளுக்கான வருகைகளை

நிறுத்தி அதற்குப்பதிலாக, தொலைபேசி அல்லது வீடியோ கலந்துரையாடல்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்துகின்றார். இதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் மாத்திரம், மருத்துவமனையின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு மர நிழலின் கீழ், நேருக்கு நேரான சந்திப்பை ஏற்படுத்துவதாக, ப்ரேசர் கூறினார்.

இதேபோல், வட கரோலினா பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள் தொலைமருத்துவக் கலந்துரை யாடல்கள் மூலம் சிகிச்சை முறைகளை விளக்கி, ஆபத்தில் இருக்கும் கிராமப்புற நோயாளிகள் நன்மை அடையச் செய்கின்றார்கள். அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த போதிலும், பல்கலைக்கழகத்தின் நீரிழிவு மையத்தின் மருத்துவரும் இயக்குநருமான ஜோன் பியூஸ், “மக்கள் வைரசுக்குப் பயந்து சுகாதார வசதிகளை தவிர்ப்பதால், காலில் உண்டாகும் காயங்கள்,மற்றும் ஆபத்தான உயர் குருதி வெல்லங் களுக்கான சிகிச்சைகள் போன்றன அவர்களால், தவறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக, இன்சுலின் விலை உயர்ந்து வருவதானது, போதைப்பொருள் விலைகளின் உயர்வு மற்றும் தேசிய ரீதியிலான குற்றச் செயல்களையும் தூண்டி விட்டுள்ளது. தொற்றுநோயின் ஆரம்பத்தில், அமெரிக்க நீரிழிவுச் சங்கம், மாநில-ஒழுங்குபடுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் இன்சுலின் மற்றும்பிற குளுக்கோசைக் குறைக்கும் மருந்துகளுக்கான கைச்செலவுகளை நீக்குமாறும் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டபோதும், எந்த மாநிலமும் அந்த ஆலோசனையை முழுமையாகப் பின்பற்றவில்லை என்று .டி.. தெரிவித்தது. ஆயினும் ஜூலை மாதம் தொடக்கம், இன்சுலின் போன்ற தடுப்பு மருந்துகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டன.

இதேபோன்று சூதாட்ட விடுதியை நடத்தி வந்த 68 வயதான ரொபர்ட் வாசிங்டன் ஊழுஏஐனு-19 இன் தாக்கத்தின் காரணமாகத் தனது நீரிழிவுநோயின் தாக்கம், ஆபத்தான நிலையை உருவாக்கியதை அவர் அறிந்திருந்தார். ஆயினும், வாசிங்டனின் மேற்பார்வையாளர்கள் அவரை ஒரு வண்டியில் தனியாக பயணம் செய்யமுடியும் என்று உறுதியளித்ததால், அவர் மீண்டும் வேலைக்கு வந்ததும், அவர் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டார், அங்கு சூதாட்டக்காரர்களின் நீண்ட வரிசைகள் காத்திருந்தன, பெரும்பாலானவர்கள், முகக் கவசங்கள் இல்லாமல் நின்றதாக ரொபர்ட் கூறினார். அவர் அதனைக் கண்டு  பயந்துவிட்டதாக அவரது மகள் லீனா கூறினார்.

மே மாத இறுதியில் அவரது குருதி மாதிரி,  வைரஸ் சோதனைக்காகப் பரிசோதித்த பொழுது, கொரோனாவுக்கான நேர்விளைவைக் காட்டியிருந்ததால், அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நோய் முற்றிய நிலையில் ஜூன் மாதம் 11 ஆம் திகதி  ஊழுஏஐனு-19 இன் தாக்கத்தினால், அவர் மரணமடைந்து விட்டார்.

வாசிங்டன் இறந்த ஒரு வாரத்தின் பின்னர், அந்த மாநிலத்தில் ஊழுஏஐனு-19 தாக்க்ததின் அறிகுறிகள் அதிகளவில் காணப்பட்டதால்,அவரது சூதாட்ட நிலையம் முற்றாக மூடப்பட்டது. ஆனால் அவரது மரண்ததின் பின்னர், கலிபோர்னியாவின் சாக்ரமென்டோவில் தொலைக்காட்சி நிலையத்தின் விளையாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நிருபருமான அவரது மகள் லீனா குறிப்பிடுகையில், நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தால், இத்தகைய மரணங்களைக் கூடிய அளவுக்குத் தடுக்க முடியும் என்று  தெரிவித்தார்.

Read next: சீனாவுக்கு மிக அருகே போர் விமானங்களை பறக்க விட்ட அமெரிக்கா