பிரித்தானியாவில் முன்முறையாக செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனைக்கு கொரோனா தொற்று உறுதி

1 week

Photo: பிரநித்துவ புகைப்படம் 

பிரித்தானியாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனைக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸுக்கு இலக்கான முதல் விலங்காக இந்த பூனை மாறியுள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் இந்த பூனைக்கு கடந்த ஜூலை 22 அன்று சர்ரேயின் வெயிரிட்ஜ், ஒரு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது.

இந்த பூனையின் உரிமையாளர்களிடமிருந்து வைரஸ் பாதித்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

எனினும் விலங்கு மற்றும் குடும்பம் இருவரும் முழு மீட்சியை அடைந்துள்ளனர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது ஒரு மிகவும் அரிதான நிகழ்வு என்று தலைமை கால்நடை அதிகாரி கிறிஸ்டின் மிடில்மிஸ்  விளக்கினார்.

மற்றும் இதுவரை கண்டறியப்பட்ட பாதிக்கப்பட்ட விலங்குகள் லேசான மருத்துவ அறிகுறிகளை மட்டுமே காட்டுகின்றன மற்றும் சில நாட்களுக்குள் குணமடைகின்றன என்றார்.

மேலும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கான பொதுவான ஆலோசனையின் படி, விலங்குகளுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பும் பின்பும் உங்கள் கைகளைத் தவறாமல் கழுவ வேண்டும், என்று இங்கிலாந்தின் பொது சுகாதார  மருத்துவ இயக்குனர் யுவோன் டாய்ல் கூறினார்.

Read next: ரஃபேல் போர் விமானங்கள் நாளை மறுநாள் இந்தியா வருகை