பிரித்தானியர்களின் வங்கிக்கணக்கில் அரசு செலுத்த இருக்கும் பெருந்தொகை பணம்!!

1 week

Photo: Will Quince MP

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அவர்களது வங்கிக்கணக்கில் பின்வரும் காரணத்துக்காக பிரித்தானிய அரசிடம் இருந்து பணம் பெற இருக்கிறார்கள் பெற இருக்கிறார்கள்.

அதன்படி, ஆளுக்கு 149 பவுண்டுகள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது (ஒருவரின் சூழலை பொறுத்து இது £118க்கும் £149 க்கும் இடையில் இருக்கும்).

அரசின் பல்வேறு உதவித்தொகை வழங்கும் திட்டங்களில் ஏதாவது ஒன்றை பெற்றுவருவோர் Universal Credit திட்டத்துக்கு மாறும்போது, இந்த தொகை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் ஜூலை மாதம் 22 திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

Support, Income-based Jobseekers Allowance, Income-related Employment and Support Allowance and Working Tax Credit ஆகிய அனைத்து திட்டங்களுக்கும் மாற்றாக Universal Credit திட்டம் அறிவிக்கப்படுள்ளது.

அத்துடன் Enhanced Disability Premium, Carer Premium மற்றும் ESA work-related activity component ஆகிய திட்டங்களும் இதற்குள் அடக்கம்.

மேலும், இந்த தொகையை திருப்பிச் செலுத்தவேண்டியதில்லை என்பது மற்றொரு மகிழ்சியான செய்தி என்கிறார் அந்தத் துறைக்கான அமைச்சர் வில் குயின்ஸ் (Will Quince).


Read next: பிரித்தானியாவில் முன்முறையாக செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனைக்கு கொரோனா தொற்று உறுதி