பிரித்தானியாவில் இரண்டாவது முறையாக 14 ஆக குறைந்த தினசரி கொரோனா இறப்புகள்

1 week

இன்று பிரித்தானிய சுகாதார துறை  அறிவித்த தகவலின் படி பிரித்தானியவில் கோவிட்-19 தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையானது 14 ஆல் அதிகரித்ததுஇந்த இறப்புகளானது முதியோர் இல்லம்  மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களில் இறந்தவர்களையும் உள்ளடக்கும். இந்த எண்ணிக்கையே 23 மூன்றாம் திகதி பிரித்தானியா  முடக்கம் அறிவித்த பின்னர் வரும் ஞாயிற்றுக் கிழமை ஒன்றில் இரணடைவது முறையாக மிகக்குறைவாக பதிவாகி உள்ள இறப்புகளின் எண்ணிக்கையாகும்.

இந்த இறப்புகளில், இங்கிலாந்தில் உள்ள மருத்துவமணிகளில் 9 மரணங்களும், வேல்ஸ் இல் கடந்த வாரத்துக்கு பின்னர் முதல் முறையாக 1 மரணமும் சேர்ந்து பிரித்தானியாவின் மொத்த மரணங்களின் எண்ணிக்கையை 33,877 ஆக எடுத்துச் சென்றது.

ஸ்காட்லாந்தில் தொடர்ந்து 10 வது நாளாக எந்த இறப்புகளும் பதிவாக இல்லை அதே வேளையில் வட அயர்லாந்து தற்போழுது இறப்புகளின் எண்ணிக்கையை வார இறுதியில் வெளியிடுவது இல்லை என்று அறியவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வந்த ஞாயிற்றுக்கிழமையில்ஜூலை 19, 15 பேர்,,  ஜூலை 12, 19 பேர்  மற்றும் 21 பேர் ஜூன் 28இல் இறந்ததனாக பதிவாகி உள்ளது.

பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் இறந்தவர்களில் அதிகப்படியாக ஏப்ரல் 12 திகதி 710 பேர் இறந்தகாக பதிவாகி உள்ளது. அந்த தருணத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது.


இங்கிலாந்தை பொறுத்தவரை 14 புதிய சிறப்புகளையும் சேர்ந்து மொத்தம் 29,281 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் பலியாகி உள்ளார்கள்.

இங்கிலாந்தின் தென் கிழக்கு மற்றும் கிழக்கு பகுதியில் முறையே 3 இறப்புகள் பதிவாகி உள்ளது அதேவேளையில் மிட்லாந்தில் இரண்டு இறப்புகள் பதிவாகி உள்ளது, வட கிழக்கு மற்றும் யோர்க்ஷிய பகுதியில் ஒரு மரணம் பதிவாகி உள்ளது.

லண்டன் மற்றும் வட கிழக்கு போன்ற பகுதிகளில் எந்த புதிய மரணமும் பதிவாகவில்லை.

 

Read next: செங்டுவில் இருந்த அமெரிக்காவின் கொடி அதிரடியாக அகற்றம்