தென்னாப்பிரிக்க சிறையொன்றில் இருந்து 50 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

2 weeks

தென்னாப்பிரிக்காவில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சுமார் ஐம்பது கைதிகள் தப்பியோடியுள்ளனர்.அருகில் உள்ள கார்களில் மறைந்திருக்கலாம்  என சந்தேகிக்கப்படுகின்றது.

தென்னாபிரிக்காவின் வெஸ்ட்டர்ன் கேப்பில் உள்ள மல்மெஸ்டபர்ரி சிறையை உடைத்துக்கொண்டு வெளியேறிய கைதிகள் ஓடும் காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கைதிகள் தப்பியோடியமை தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை நாட்டில் அவசகர காலநிலைக்கு அறிவிப்பு விடுக்கவில்லை.

பெரும்பாலானவர்கள் அருகில் உள்ள பாடசாலையில் மறைந்திருக்கலாம் என்றும் இதன்போது அச்சமடைந்த சிறுவர்கள் மேசைகளில் கீழ் ஒழிந்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று அருகில் உள்ள டொயோட்டோ காட்சிக்கூடத்திலும் தப்பியோடிய கைதிகள் மறைந்திருப்பது காணொளியில் உள்ளது.

தப்பியோடி கைதிகள் ஆபத்தானவர்கள் என்றும் அடையாளம் கண்டால் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

கைதிகளை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

எத்தனை கைதிகள் மீள தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றது தொடர்பில் இது வரை தெரியவரவில்லை. 14 பேர் வரையில் பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரிடம் சரணடைந்த கைதிகள் தரையில் படுத்திருக்கும் நிலை வீடியோ செய்யப்பட்டுள்ளது.

Read next: ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் 5 ஜி தயாரிப்புகளை பன்முகப்படுத்த அறிவுரை