ஐபிஎல் போட்டி ஐ.அ. எமிரேட்சில் டிசம்பர் 19ம் தேதி தொடங்க வாய்ப்பு

2 weeks

Photo: IPL

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செப்டம்பர் மாதம் 19ம் தேதி நடத்த வாய்ப்பு உள்ளது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பரில் தொடங்கி நவம்பர் எட்டாம் தேதி வரை போட்டி நடத்த உத்தேசித்துள்ளதாகவும், வாரிய கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர்கள் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் போட்டித் தலைவர் பிரிஜேஷ் படேல் அண்மையில் தெரிவித்திருந்தார்.

Read next: ராணுவ பொறுப்பில் இருந்து முறைப்படி விலகினார் இளவரசர் பிலிப்