தன்சானியா முன்னாள் ஜனாதிபதி தனது 81 வது வயதில் காலமானார்.

2 weeks

தன்சானியாவின் முன்னாள் ஜனாதிபதி பென்ஜமின் கப்பா வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இதனை தற்போதைய ஜனாதிபதி அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

இவர் 1995 ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை தன்சானியாவின் ஜனாதிபதியாக பதவியிலிருந்துள்ளார்.

டார் எஸ் சலாம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

கிழக்காபிரிக்க நாட்டின் 3 வது ஜனாதிபதியான இவர் பல பிராந்திய பிரச்சனைகளை பதவிக்காலத்திலும் அதன் பின்னரும் தீர்ப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்.

அவரது மறைவைத் தொடர்ந்து நாட்டில் 7 நாட்கள் துக்க தினத்தை அனுஷ்ட்டிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் அனைத்து கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அனைவரும் அமைதியாகவும் பொறுமையுடனும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என ஜனாதிபதி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்

81 வயதுடைய கப்பா தூதுவராகவும் அமைச்சராகவும் சில முக்கிய அதிகாரத்தைக்கொண்டவராகவும் சேவையாற்றியுள்ளார்.

 

Read next: உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக பிரான்ஸ் மேற்குலகத்தால் தவறாக வழிநடத்தப்படுகிறது- சீனா