முன்றாவது முறை பரிசோதனையும் கைவிட்டது - கடும் கலக்கத்தில் பிரேசில் அதிபர்

2 weeks

Photo: Jair Messias Bolsonaro

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவுக்கு மூன்றாவது முறையாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையிலும் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவருக்கு முல்முறையாக கடந்த 10 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இதையடுத்து கடந்த வாரம் நடத்தப்பட்ட இரண்டாவது பரிசோதனையிலும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சனேரோ கூறியிருந்தார்.

இந்நிலையில், அதிபர் போல்சனேரோ 3-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அதிலும் அவருக்கு கொரோனா மீண்டும் உறுதியாகியுள்ளது.

பிரேசில் அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிபர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், அவரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதிபர் போல்சனேரோ தனது பணிகளை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக தொடர்ந்து கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது முதல் போல்சனேரோ ஹைட்ராக்சி குளோரக்குயின் மாத்திரைகளை எடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read next: “பிரித்தானியாவில் கொரோனா ஆதர்வு நிதி ஒரு மில்லியன் மக்களுக்கு கிடைக்கவில்லை”