உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி

2 weeks

உலகின் மிகப்பெரிய முதலீட்டாளர் வாரன் பஃபெட்டை பின்னுக்குத்தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலகின் ஐந்தாவது பணக்காரராக ஆகியுள்ளார். ஃபோர்ப்ஸின் பில்லியனர்கள் பட்டியலில், அம்பானியின் சொத்து மதிப்பு இப்போது 74.6 பில்லியன் டாலராக உள்ளது. புதன்கிழமை நிலவரப்படி, ஹாத்வேயின் தலைமை நிர்வாகி பஃபெட்டின் சொத்து 72.7 பில்லியன் டாலர்களை விட அதிகமாக உள்ளது.

அமேசானின் ஜெஃப் பெசோஸ் 185.8 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 113.1 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளார். எல்விஎம்ஹெச் தலைவரும் தலைமை நிர்வாகியுமான பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பத்தினர் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 89 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

தனது தொலைத் தொடர்பு துறையின் பங்குகளை விற்பனை, மற்றும் புதிய ஒப்பந்தங்களின் காரணமாக அவரது சொத்து மதிப்பு உயர்ந்தது. அதன் டிஜிட்டல் பிரிவில், பேஸ்புக், கூகுள், சில்வர் லேக், குவால்காம் உள்ளிட்ட நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளன. இந்த மாதம், அந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவன சொத்தின் சந்தை மதிப்பு ரூ .12 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்தது.

Read next: இத்தாலியில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு உதவித்திட்டம்