பிரேசிலில் ஒரே நேரத்தில் இரு அமைச்சர்களுக்கு கொரோனா உறுதி

2 weeks

பிரேசில் நாட்டில் ஒரே நேரத்தில் கல்வி அமைச்சர் மில்டன் ரிபெய்ரோ மற்றும்  குடியுரிமை அமைச்சர் ஓனிக்ஸ் லோரென்சோனி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு தங்களது பணியை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனரோவுக்கு கடந்த 10 தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர் பிரேசிலியாவில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்தவாறே சிகிச்சை செய்து கொண்டு முன்னேற்றம் அடைந்து வருகிறார்.

பிரேசில் நாடு, அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 2-வது நாடாக விளங்குகிறது.

அங்கு 21 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றால், பலியாகி உள்ளனர்.

Read next: இந்தியாவில் ஒரே நாளில் 20,000 பேர் குணமடைந்தனர்