கொலம்பியாவில் 17 வீரர்களுடன் மாயமான ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியாக தகவல்

2 weeks

Photo: பிரநித்துவம் படுத்தும் புகைப்படம் 

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் குவாய்வியார் மாகாணத்தில் பதுங்கி இருந்த கிளர்ச்சியாளர்களை அழிக்கும் நடவடிக்கையில் நேற்று ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த தேடுதல் வேட்டையின் போது ஒரு பிளாக்ஹாக் அதிநவீன ராணுவ ஹெலிகொப்டரில் 17 வீரர்கள் பயணம் செய்தனர்.

வீரர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் இனிடிடா ஆற்றுப்பகுதியை கடந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.

இதையடுத்து, மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணியை மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.

அப்போது இனிடிடா ஆற்றுப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருப்பதை மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர்

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். மேலும், 2 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்துக்கு கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதல் காரணமா? அல்லது தொழில்நுட்பக்கோளாறா? என்ற தகவலை தெரிவிக்க கொலம்பிய ராணுவம் மறுத்துவிட்டது.

Read next: கொரோனா உறுதியான இளம் பெண் யாருக்கும் தெரியாமல் டுபாய்க்கு தப்பிச் சென்றதால் பரபரபபு