துனிசியா பிரதமர் ஃபக்ஃபக் ராஜினாமா

3 weeks

துனிசியா நாட்டின் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தத் தகவலை ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

நிதி மோசடி தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஃபக்ஃபாக்குக்கு, சமீபத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள், அவர் ராஜிநாமா செய்துள்ளார். இதனால் துனிசிய அரசில் மிக குறைந்த காலம் பதவி வகித்த பிரதமர் இவரே ஆவார்.

மிதவாத இஸ்லாமியக் கட்சியான என்னாடாவும் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை திரும்ப பெறுவதாகவும் கூறியதை அடுத்து அவர் ராஜிநாமா செய்தார்.

சுமார் $15 மில்லியன் மதிப்பிலான அரசு ஒப்பந்தங்களைப் பெற்ற ஒரு தனியார் நிறுவனங்களில் அவர் பங்குகள் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள, ஃபக்ஃபக், தேச நலன் கருதி ராஜிநாமா செய்வதாக கூறினார்.

அடுத்த ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உறுப்பினர்களின் நம்பிக்கையை பெறவும் புதிய அரசாங்கத்தை உருவாக்கவும் அவருக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்படும்.

Read next: மீண்டும் வளர்ச்சிப்பாதையில் சீன பொருளாதாரம்