கட்டாரில் நடைபெறும் 2022 உலக கிண்ண போட்டிகளின் பொழுது ஒரு நாளைக்கு 4 போட்டிகள் இடம்பெறும்

3 weeks

உலகக்கிண்ண காற்பந்து போட்டிகளை ரசிகர்களுக்கு சந்தோஷமான ஒரு செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. புதன்கிழமை அட்டவணை உறுதி செய்யப்பட்ட பின்னர் 2022 கட்டார் உலகக்கிண்ண போட்டிகளை பார்ப்பதற்கான வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

ஒன்றுக்கொன்று இடையூறில்லாத வகையில் ஒரு நாளுக்கு நான்கு போட்டிகள் வீதம் குழு நிலைப் போட்டிகளுக்கான அட்டவணை தயார் செய்யப்படுகிறது. டோஹாவிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள மைதானங்களை தூரம் ஓப்பீட்டளவில் குறைவாகையால் ரசிகர்களும் அவற்றை நேரே சென்று பார்க்கும் வாய்ப்பும் உள்ளமை சிறப்பம்சமாகும்.

32 அணிகள் பங்கு கொள்ளும் இந்த தொடரில் ஆரம்ப ஆட்டங்கள் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கும் நான்காவது போட்டி இரவு 10 மணிக்கும் நடைபெறும் வகையில் தயார்படுத்தப்படவுள்ளன.

நவம்பர் 21ம் திகதி ஆரம்பமாகும் தொடக்க ஆட்டம் நடக்கும் அல் பாய்ட் மைதானம் கூடார பாணியில் வடிவமைக்கப்பட்ட 60000 ரசிகர்களை உள்ளடக்கும் திறன் கொண்டதாகும்.

அதே போல இறுதிப்போட்டி 80000 ரசிகர்களை உள்ளடக்கும் திறன்கொண்ட லூசெயில் மைதானத்தில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read next: ஈரானில் தீ விபத்துக்குள்ளான 7 கப்பல்கள்