ஜனநாயகத்திற்கு சார்பான தேர்தலில் பல்லாயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் வாக்களிப்பு

Jul 13, 2020 11:13 am

புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறி செயற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தேர்தல்கள் நடைபெற்று இருக்கிறது.

சட்டமன்ற சபைக்க்காக செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கான எதிர்கட்சி வேட்பாளர்களை தீர்மானிக்ககும் வகையிலான வாக்கெடுப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்த தேர்தலானது கடந்த மாதம் அமுலுக்கு வந்த சர்ச்சைக்குரிய புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு பரீட்சிப்பாக பார்க்கப்படுகின்றது.

சர்வதேச கண்டனத்திற்கு மத்தியில்       நகரின் முழுக்கட்டுப்பாட்டையும் தன்னகப்படுத்தும் சட்டமே கடந்த மாதம் அமுலுக்கு வந்தது.

2019 ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை போன்றவற்றை தடுப்பதற்காக சட்டம் அவசியம் என்று சீனா குறிப்பிட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டு பிரித்தானிய காலணித்துவம் முடிவுக்கு வந்ததும் ஐம்பது ஆண்டுகளாக ஹொங்கொங் மக்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்ட சுதந்திரம் வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன.

நகரில் உள்ள 250ற்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களின் பல ஆயிரக்கணக்கான  மக்கள்  ஞாயிற்றுக்கிழமை வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஆரம்பகட்ட எதிர்பார்ப்புகளை விட அதிகமான மக்கள் வாக்களித்தனர்.

சென்ற வார இறுதியில் 147000 வாக்குகளை ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் 500000 மக்கள் நேற்றைய வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.

இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபடுவது அமுல்படுத்தப்பட்ட புதிய தேசிய சட்டத்தை மீறும் செயல் என சீன சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆரம்பக்கட்ட வாக்கெடுப்பை அவர்கள் ஏற்பாடு செய்தமைக்கான காரணம் புதிய சட்டத்தை நிராகரிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்திடம் வலுவான ஆதரவு தமக்கு கிடைப்பதாகவும் ஹொங்கொங்கை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என வேட்பாளர்களில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான பதிலி இந்த வாக்கெடுப்பு என்றும் இதனை அழைத்துள்ளார்.

முழுமையான முடிவு இன்றைய தினம் வெளியிடப்படும். செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் இருந்து வேட்பாளர்கள் பின்வாங்கிவிடுவார்கள் என எதிர்தரப்பு செயற்பாட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

 

Read next: பிரித்தானிய அரசின் சலுகை விலையில் உணவகங்களில் உண்பதற்க்கான உறுப்பினர் பதிவு ஆரம்பம்!