மின்சாரம் தாக்கி 5மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

Nov 24, 2022 12:07 pm

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்னபசிலிகுட்டை பகுதியைச் சேர்ந்த ராஜாதேசிங்கு மனைவி  பூர்ணிமா (25) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில்

தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக பூர்ணிமா இருந்துள்ளார்.

இன்று வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் வாட்டர் சர்வீஸ் செய்யும் கருவியில் இன்று மாட்டு கொட்டகையை சுத்தம் செய்யும் போது எதிர்பாராத விதமாக கருவியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் நீண்ட நேரமாக பூர்ணிமா வெளியே வராததை  அறிந்து அவரது உறவினர்கள் மாட்டு கொட்டகையில்  சென்று பார்த்தபோது சடலமாக இருந்துள்ளார்.

பின்னர் இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு தகவல் தெரிவித்தின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற  போலீசார் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read next: இராணுவ ஆள் சேர்ப்பு முகமுக்கு சென்று திரும்பிய இளைஞர் செய்த கொடுஞ்செயல்