2020 போர்மியுலா வன் பந்தயம் ஆரம்பம்

1 month

போர்மியூலா வன்னின் அட்டவணைப்படுத்தப்பட்ட முதல் சுற்று போட்டிகள் இவ்வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ரெட்புல் ரிங் முதல் இரண்டு தொடர்ச்சியான பந்தயத்தை பார்வையாளர்கள் இன்றி நடத்த தீர்மானித்துள்ளது.

22 போட்டிகளுடன் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மார்ச் 15ம் திகதிக்கான ஆரம்ப போட்டி கொவிட் 19 தொற்றுக் காரணமாக இரத்து செய்யப்பட்டது.

வருடத்திற்கான முதலாவது போட்டி ஜுலை மாதம் 5ம் திகதி அவுஸ்ரியாவில் நடைபெற உள்ளதுடன்,கிரேன்ட்பிரிக்ஸின் ஸ்டெயர்மார்க் பந்தயம் வெற்றியை தனதாக்கிக்கொண்ட ரெட்புல்லுடன் ஸ்பெயல்பேர்கில் ஒரு வாரம் கழிந்து நடைபெறும்.

ஒரே பருவத்தில் இரண்டு சாம்பியன்கள் பந்தயத்தை நடத்தும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.முதல் தடவையாக இந்த போட்டி அஸ்திரேலியாவில் ஆரம்பமாக உள்ளதுடன்,முதல் தடவையாக பார்வையாளர்கள் இன்றி நடைபெறுகின்றது.

ஜுலை 19ம் திகதி 10 அணிகள் வெற்றிகரமாக 3வது வார இறுதியில் புடபெஸ்ட்டின் ஹங்கரொய்க்கு பயணிக்க உள்ளதுடன்,இவர்கள் வீடு திரும்புவதற்கு முன் இவர்கள் மிகவும் கவனமான கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1950 ஆம் ஆண்டு முதலாவது போர்மியூலாவன் உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தை நடத்திய சில்வர்ஸ்டோன்,ஆகஸ்ட் 2ம் திகதி பிரிட்டிஸ் கிரேண்ட் பிரிக்ஸ்சை நடத்த தீர்மானித்திருந்தது.இதனை தொடர்ந்துஆகஸ்ட் 9ம் திகதி  பிரிட்டிஸ் கிரேண்ட் பிரிக்ஸின் .70வது நிறைவாண்டும் கொண்டாடப்படும்.

பார்சிலோனாவின் சேர்க்கியூட் டீ கெட்டலுனா ஸ்பெனிஷ் கிரேண்ட் பிரி போட்டின ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடத்தப்பட உள்ளதுடன்,அடுத்த ஓய்வுக்கு முன்னர் 3 முன்னனி பந்தயங்களையும் நிறைவுசெய்கின்றது.

அத்துடன் பெல்ஜியத்தின் ஸ்பாவிலும் இத்தாலியின் மொன்ஸாவிலும் ஆகஸ்;ட் 30 மற்றும் செப்டெம்பர் 6 ஆம் திகதிகளில் இரண்டு பந்தயங்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.

குறித்த வார இறுதியிலேயே போர்மியூலா டு மற்றும் போர்மியூலா த்ரி பந்தயங்களும் நடத்தப்படும்.

பஹ்ரேய்னில் நடைபெறும் போர்மியுலா வன் பந்தயத்தை தொடர்ந்து  அபுதாபியில் டிசம்பர் மாதம் முடிவடையும்; பந்தயத்தில் 15 மற்றும் 18 போட்டிகளை நடத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியா,மொனாக்கோ,நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படவிருந்த நான்கு பந்தயங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் சீனா,கனடா,அஸர்பைஜான் மற்றும் வியட்னாம் ஆகியன திகதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த காத்திருக்கின்றன.

இதேவேளை சிஙகப்பூர்,ரஷ்யா,ஜப்பான்,ஐக்கிய அமெரிக்கா , மெக்சிக்கோ மற்றும் பிறேஸில் ஆகியன போட்டி பந்தயம் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையில் உள்ளன.

சுமார் மூன்றரை மாத இடைவெளி பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.2020 க்கான பந்தயம் ஆரம்பிப்பதற்கு முன்னர் சிலர் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய அணிகளை உறுதிப்படுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளன.

ஸ்பெனியர்ட் கார்லோஸ் சென்ஸ் அடுத்த வருடம் பெராரியில் இணைந்துக்கொள்வதற்கு  திட்டமிட்டுள்ளார்.அவுஸ்திரேலியாவின் டேனியல் ரிக்கார்டோவை பதிலாக மெலெரன் இணைத்துக்கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

25 வயதான செய்ன்ஸ் உலக சாம்பியன் செபஸ்ரியன் வெட்டேலுக்கு பதிலாக இளம் வீரரான மொனெகஸாக் சார்ள்ஸ{டன் நான்கு தடவைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டவர் என பெராரி குறிப்பிட்டுள்ளது.அனைவராலும் கவரப்பட்ட அணியானது 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான பந்தயத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வெட்டேலின் அடுத்த கட்ட நகர்வு குறித்து தொடர்ந்தும் நிச்சயமற்ற நிலைமையே காணப்படுகின்றது.

ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய தற்போது பல சவால்களை எதிர்கொள்கின்ற போர்மியுலா வன்னை மேற்கொள்ளப்பட்ட மூலோபாய மதிப்பாய்வின் அடிப்படையில் விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக வில்லியம்ஸ் மே மாத இறுதியில் அறிவித்தது.

2019 ஆம் ஆண்டுக்கான வருமான தரவை வில்லியம்ஸ் க்ரேன்ட் பிரி ஹோல்டிங்ஸ் வெளியிட்டுள்ளது.இதில் 2019 ஆம் ஆண்டு 95.4 மில்லியன் பவுண்ஸ்களை வருமானமாக பெற்றுள்ளது.அத்துடன் அதன் முந்தைய ஆண்டில் 130.7 மில்லியனை வருவாயக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1997 ஆம் ஆண்டு இறுதியாக வெற்றிக்கொண்ட முன்னாள் சாம்பியன் கனடாவின் ஜேக்குய்ஸ் வில்லெனியூ 2012 ஆம் ஆண்டு பந்தயத்தை வெற்றிக்கொள்ளவில்லை.

2018 ஆம் ஆண்டு 10வது இடத்திலிருந்த போலந்தின் ரொபர்ட் க்யூபிக்கா ஒரு புள்ளியை பெற்று 2019 ஆம் ஆண்டு போட்டி நிறைவுக்கு வந்தது.

கொவிட் 19 தொற்று காரணமாக அணியின் நிதிநிலையை மோசமாக்கியுள்ளதுடன்,2020 ஆம் ஆண்டுக்கான வருமான வர்த்தக  உரிமத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

டைட்டில் பங்காளரான ரொக்கிட் மற்றும் முன்னனி அனுசரணையாளர் ரொக் ட்ரிங்ஸ் ஆகியோருடனான உறவை முடித்துக்கொள்வதாக வில்லியம்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தமது ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிலைமை வழமைக்கு திரும்பும் போது மீண்டும் ஆரம்பிக்கவும் அதற்கான நிதி பங்களிப்பை வழங்கவும் தாயர் என அவர்கள் அறிவித்துள்ளனர்.போர்மியூலா வன் பந்தயம் ஒஸ்ரியாவில் ஜுலை மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போர்மியூலா வன் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் 145 மில்லியன் நிதியை ஒதுக்க உள்ளது.

வில்லியம்ஸ் அணி 9 தடவைகள் தொடர் வெற்றியாளராகவும்,7 பந்தய வீரர்களுக்கான பட்டத்தை பெற்றுள்ளதுடன்,விளையாட்டு துறை வரலாற்றில் முன்னேற்றகரமான பல வெற்றிகளை கண்ட ஒரு அணி வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Read next: தென் சீன கடல் பகுதியில் பதற்றம்! போர் பயிற்சியில் அமெரிக்கா