மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாக 445 மில்லியன் வருவாய்.

1 week

மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 445,319,656 ரூபாய் சம்பாதித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷ விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், விமான நிலையத்திற்கு செலவிடப்பட்ட தொகை 247.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறினார்.மேலும் மத்தள சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 10,206 விமானங்கள் தரையிறங்கியுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.2013 இல் திறக்கப்பட்ட குறித்த விமான நிலையத்தில் 2020 நவம்பர் வரை 58,651 பேர் வருகைதந்துள்ளனர் என்றும் 73,513 பேர் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Read next: யாழில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று.