தென்னாபிரிக்க அணியின் 7 பேருக்கு கொரோனா

1 month

தென்னாபிரிக்க அணியின் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை சார்பில் ஒப்பந்த வீரர்கள், பணியாளர்கள் உட்பட 100 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், தங்களது மருத்துவ விதிப்படி, கொரோனாவால் பாதித்தவர்கள் குறித்து வெளியில் சொல்ல முடியாது என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்திய மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க தென்னாபிரிக்க ஆப்ரிக்க அணி கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்தது. எனினும், கொரோனா பரவல் காரணமாக அந்த தொடர் கைவிடப்பட, தென்னாபிரிக்க வீரர்கள் நாடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read next: இந்திய - சீன நாட்டு இராணுவ தளபதிகளின் சந்திப்பில் முன்னேற்றம்