எக்குவடோர் சிறையில் கைததிகளிடையே கலவரம்,கத்திக்குத்து - 43பேர் பலி

May 10, 2022 10:28 am

தென் அமெரிக்க நாடான எக்குவடோரில் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரம்,கத்திக்குத்து சம்பவத்தில் 43 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

போதைக் கடத்தல் கும்பலின் தலைவன் சிறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து இரு கும்பலிடையே  சண்டை ஏற்பட்டது.கைதிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டதில் 43 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 200க்கும் மேற்பட்டோர் சிறையை உடைத்து தப்பினர்.112 கைதிகளை போலிஸார் பிடித்த  நிலையில் தலைமறைவான நூற்றுக்கும் மேற்பட்டோரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி வருகின்றனர். 

Read next: ராஜபக்ஷர்கள் நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் வெளியேற முடியாமல் தடுக்கும் இளைஞர்கள்