குழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா?

1 year

பிரித்தானிய பிரஜாவுரிமை உடைய பிள்ளைகள் இருப்பது நாடு நடத்தப்படும் நிலையில் இருக்கும் ஒருவருக்கு UK இல் தங்கி இருப்பதற்கு ஒரு கனமான காரணியாக இருக்காது என அண்மையில் Patel [2020] UKUT 45 (IAC) என்ற வழக்கில் தீhமானிக்கப் பட்டு உள்ளது.

இந்த வழக்கில் திரு பட்டேல் ஒரு இந்திய குடிமகன். அவர் 2016 ஆம் ஆண்டு பண மோசடிக் (money laundering) குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டு 3 1/2 வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் நாடு கடத்தப் படும் நிலையில் இருந்தார். இந்த நாடு கடத்தப்படும் கட்டளைக்கு எதிராக அவர் மேன் முறையீடு செய்தார். முதல் நிலை நியாயாதிக்க மன்றில் அவரை நாடு கடத்துவதற்கு உள் துறை அமைச்சு பரிந்துரைத்து இருப்பது அவர் உடைய 7 வயதான பிரித்தானிய குடியுரிமை உடைய மகனிற்கும் மற்றும் அவர் உடைய பிரித்தானிய குடியுரிமை உடைய மனைவிக்கும் முறையற்ற விதத்தில் கடுமையாக இருக்காது (unduly harsh) எனக் கூறி உள்ளது.

திரு பட்டேல் நாடு கடத்தப் பட்டால்; தானும் மகனும் இந்தியாவிற்கு அவர் உடன் கூட செல்ல வேண்டுமா திருமதி பட்டேலிற்கு  தெளிவில்லாமல் இருந்தது. இந்த வழக்கில் திரு பட்டேலின் குடும்பம் ஆனது அவர் உடைய மகன் இந்தியாவிற்கு சென்றால் அவர் உடைய கல்வி மற்றும் ஏனைய விடயங்களில் ஏற்படும் பாதிப்புகளை முதல் நிலை நியாயாதிக்க மன்று ஆனது கருத்தில் கொள்ளவில்லை என விவாதித்தார்கள்..

மேல் நியாயாதிக்க சபை ஆனது அதிக அளவான முறையற்ற விதமான கடுமை (unduly harsh) சோதனையை பயன்படுத்தினால் பிள்ளையின் குடியுரிமையில் அது என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என பரிசீலித்து உள்ளது.

பிரித்தானிய குடியுரிமை என்பது ஒரு பொருத்தமான காரணி தான். ஆனாலும் அது ஒரு மிக முக்கியமான காரணி அல்ல. அது குறிப்பிட்ட வழக்கின் நிகழ்வுகளைப் பொறுத்தது.

ஒரு நபர் பிரித்தானிய குடியுரிமை உடைய பிள்ளை உடன் உண்மையான மற்றும் பெற்றோர் உறவை வைத்து உள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவர்முறையற்ற விதமான கடுமை சோதனை (unduly harsh test) வேண்டுகோள்களில் இருந்து விதி விலக்கு பெறுகின்றார் என்று அர்த்தம் அல்ல என நியாயாதிக்க மன்றம் குறிப்பிட்டு உள்ளது. திருமதி பட்டேலும் அவர் உடைய மகனும் திரு பட்டேல் உடன் கூட இந்தியாவிற்கு செல்வது அல்லது செல்லாமல் ருமு இல் தங்கி இருப்பது என்பது கடுமையான பாதிப்பாக இருக்காமல் மிகக் கடினமான பாதிப்பாக இருக்க வேண்டும்.

இந்த வழக்கில் திரு பட்டேலும் அவரது மனைவியும் தமது பிள்ளையை இந்தியாவில் தனியார் பாடசாலையில் ஆங்கிலத்தில் கல்வி கற்பிக்க அவர்களுக்கு வசதி இல்லை என்றும் அவருக்கு இந்தியாவிற்கு சென்றால் குஜராத்தி மொழியில் கல்வி கற்க வேண்டும். ஆனால் அவர்களது மகனிற்கு குஜராத்தி மொழி தெரியாது என்றும் அவர்களது மகனிற்கு பிறவி நோய் காரணமாக வருடாந்தம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவருக்கு அவர் உடைய பாடசாலை மற்றும் பாடசாலை நண்பர்கள் தான் மகிழ்ச்சியை மற்றும் ஸ்திரத் தன்மையை தருவது எனவும் அவற்றை இழக்க நேரிடும் எனவும் வாதிட்டார்கள்.

மேலும் இந்த வழக்கில் திருமதி பட்டேலுக்கும் அவரது மகனிற்கும் திரு பட்டேலை நாடு நடத்துவதினால் ஏற்படும் கஸ்டங்கள் மற்றும் பாதிப்புகள் முறையற்ற விதத்தில் கடுமையானவை அல்ல என முதல் நிலை தீர்ப்பாயம் கூறி உள்ளது.

ஆகவே குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் அவர் உடைய மனைவி மற்றும் அவர் உடைய பிள்ளை பிரித்தானிய பிரஜைகளாக இருப்பதினால் அவர் நாடு கடத்தப்பட மாட்டார் என எண்ணுவது தவறானதாகும். ஆனால் அதே சமயம்  இது ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கின் நிகழ்வுகளைப் பொறுத்தது ஆகும்.

 

Read next: சுவிட்சர்லாந்து முதல் கொரோனா வைரஸ் மரணத்தை உறுதிப்படுத்தியது.