ஐசீசீயின் புதிய விதிகள்
Jun 10, 2020 08:27 pm

Photo: facebook.com/icc
டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடும் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படுமாயின், அவருக்கு மாற்றீடாக வேறொரு வீரரைக் களமிறக்க அனுமதிப்பது என சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் இடைநிறுதப்பட்டிருந்தன.
இந்தநிலையில், இயல்புநிலை பல நாடுகளில் தொற்று பரவல் கனிசமாக குறைவடைந்துள்ளதை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படியே இந்த புதிய விதிகளையும் சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.
அதேசயம், பந்தை பொலிவாக்க எல்லை மீறும் வகையில் எச்சிலைப் பயன்படுத்தும் பட்சத்தில் அதற்கு தண்டனை வழங்கும் முறைமையொன்றையும் ஐசீசீ அறிமுகம் செய்துள்ளது.
Read next: கொரோனா நெருக்கடி முடிவுக்கு வர நீண்ட காலம் செல்லும்