ஆசிய சுற்றுத் தொடர் இலங்கையில்?

Jun 10, 2020 07:18 pm

ரி-20 உலகக் கிண்ண சுற்றுத்தொடர் பற்றி சர்வதேச கிரிக்கட் பேரவை மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு அமைய, ஆசிய வெற்றிக் கிண்ண தொடர் பற்றி முடிவு செய்யப் போவதாக ஆசிய கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

ஆசிய சுற்றுத்தொடரை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்த ஏற்கனவே திகதி குறிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரை பாகிஸ்தான் ஏற்று நடத்த முன்வந்திருந்தபோதிலும், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை.

இதன் காரணமாக, போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவது பற்றி யோசனை கூறப்பட்டது.

அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா நெருக்கடி தீவிரம் பெற்றுள்ளதால், ஆசிய சுற்றுத்தொடரை இலங்கையில் நடத்துவது பற்றியும் பரிசீலிக்கப்படுகிறது.

Read next: எக்ஸ்போ-2020 ஏற்றுமதிக் கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது