கனடா செல்லும் திட்டத்துடன் வெளிநாடு ஒன்றில் பதுங்கியிருந்த 38 இலங்கையர்கள்!

Jul 25, 2021 04:44 am

சட்டவிரோதமாக கனடா செல்லும் முயற்சியில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது குறித்து இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக பொலிஸாருடன், மங்களூர் பொலிஸார் இணைந்து சுமார் ஒரு மாதமாக நடத்திய தேடலில் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்கள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கனடாவுக்கு குடிபெயர தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக நபர் ஒருவருக்கு, இலங்கை மதிப்பில் 10 லட்சம் ரூபா வீதம் கொடுத்து கனடா செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்களூர் நகர பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மேலதிக விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

மேலும், இந்த வழக்கு இந்திய தேசிய புலனாய்வு  பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கடந்த மார்ச் மாதம் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Read next: உலகளவில் மூன்றாம் இடத்தில் பிரேசில்! வீதிக்கு இறங்கிய மக்கள்