தென் சீனாவில் பெய்த கனத்த மழையில் வெள்ளம் ஏற்பட்டது

Jun 09, 2020 09:33 pm

தென் சீனாவில் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி வட்டாரத்தின் சில நகரங்களில் வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கனத்த மழை பெய்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

பைஸ் நகரில் வெள்ளிக்கிழமை காலை அதிகபட்சமாக 186 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.இதனால் அங்கிருந்த சில  நகரங்களின் சாலைகள் நீரில் மூழ்கிவிட்டன.

பையிள் சாலைகள் நீரில் மூழ்கியிருப்பதால்,வாகனஓட்டிகள்‌தங்கள் காருக்குள் சிக்கிக் கொண்டனர்.தீயணைப்பு வீரர்கள் விரைவாக வந்து அவர்களை மீட்டனர்.

ஒரு குடியிருப்பு சமூகத்தில், சிக்கியுள்ள குடியிருப்பாளர்களை மீட்டு, பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு சேர்க்க உயிர் காக்கும் தெப்பத்தை பயன்படுத்தினர்.

குய்லின் நகரத்தில் உள்ள ஒரு நகரம் வியாழக்கிழமையன்று பெய்த கனத்த மழையினால் சேதமடைந்தது.

மழை நீரினால் தாழ்வான பகுதிகளில் உள்ள நான்கு கிராமங்களும் நீரில் மூழ்கிவிட்டன.இதனால் கிட்டத்தட்ட 1000 குடியிருப்பு வாசிகள் வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.அவர்கள் வெளியேறுவதற்கு இருந்த ஒரே பாதையும் வெள்ளத்தால் அடைக்கப்பட்டது.இதனால் அவர்கள் கப்பல்களை மட்டுமே பயன்படுத்தும் நிலமை ஏற்பட்டது.

இப்போதைய நிலையில், நாங்கள் படகுகளை தான் நம்பியிருக்கிறோம்.படகுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நாங்கள் கிரமத்தை விட்டு வெளியேறியிருக்க முடியாது.என்று தவான் கிராமத்தின் கிராம் குழுவின் கட்சி செயலாளர் மோ சியுஹுவா கூறினார்.

 அதற்கு பதிலளிக்கும் விதமாக, உள்ளூர் அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வேறு இடங்களுக்கு கொண்டு சேர்க்க தேவையான படகுகளை அனுப்பி வைத்தனர்.மேலும் அவர்கள் சாலைகளில் எச்சரிக்கை அறிகுறிகளையும் அமைத்து, சில பகுதிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றி வளைத்தனர்.

 

 அந்த பகுதியின் வானிலை ஆய்வுத்துறை,வெள்ளக் கட்டுப்பாட்டிற்கு தயாராக இருக்கவும், நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் போன்ற இரண்டாம் நிலை பேரழிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் உள்ளூர்வாசிகளுக்கு வழியுறுத்தியது.

Read next: தென் கொரியாவுடனான தொடர்பு வசதியைத் துண்டிக்கப்போவதாக, வடகொரியா அறிவிப்பு