ஐசிசியிடம் வசிம் ஜபார் கோரிக்கை

Jun 09, 2020 09:40 am

Photo: Twitter

பந்தை பளபளப்பாக்க எச்சிலுக்கு தடை விதிக்கப்பட்டால் பந்துவீச்சாளர்களுக்கு சிரமம் என இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் வசிம் ஜபார் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கிரிக்கெட் அரங்கில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அனில் கும்ளே தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் சபை, பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த தடை விதிக்க பரிந்துரை செய்தது. இதற்கு பதிலாக வியர்வையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், இதுகுறித்து வசிம் ஜபார் கருத்து தெரிவிக்கையில், பந்தை பளபளப்பாக்க எச்சிலுக்கு தடை விதிக்கப்பட்டால் பந்துவீச்சாளர்களுக்கு சிரமமாகிவிடும்.

இதனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு எளிதாக அதிக ஓட்டங்களைப் பெற முடியும். எனவே இந்த விடயத்திற்கு சர்வதேச கிரிக்கெட் சபை விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Read next: சீனாவின் ஏற்றுமதியில் சரிவு