கோஹ்லி குறித்து கேன் வில்லியம்ஸன்

Jun 09, 2020 09:35 am

Photo: Twitter

விராட் கோஹ்லியின் நட்பு மிகவும் சுவாரஸ்யமானது என நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து கிரிக்கெட் அணி தலைவர்களான விராட் கோஹ்லி, கேன் வில்லியம்சன் ஆகியோர் 2008ஆம் ஆண்டு மலேசியாவில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ணப் போட்டியில் பங்கேற்றனர்.

அப்போது இருந்தே இவர்களுக்கு இடையில் உருவான நட்பு இன்றும் தொடர்கிறது.

இந்தநிலையில், நியூசிலாந்து அணி தலைவர் கேன் வில்லியம்சன் குறிப்பிடும் போது, நாங்கள் இருவரும் எதிர் எதிராக விளையாடிக் கொள்வதை எங்களுடைய அதிஸ்;டமாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கோஹ்லியின் முன்னேற்றத்தையும், பயணத்தையும் தற்போது வரை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் கேன் வில்லியம்சன் குறிப்பிட்டுள்ளார்.

Read next: ஐசிசியிடம் வசிம் ஜபார் கோரிக்கை