தனிப்பட்ட முறையில் நிதியுதவி: வசீம் கான்

Jun 08, 2020 05:10 pm

படம் விளக்கத்திற்கு மட்டும் 

கொரோனா தொற்று நோய் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் வீரர்களுக்கும், ஸ்கோர் பதிவாளர்களுக்கும், மைதான பணியாளர்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் உதவி செய்வதென பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் தீர்மானித்துள்ளார்.

இதற்காக, அடுத்து வரும் மூன்று மாதங்களில் தாம் பாகிஸ்தானிய பெறுமதியில் 15 இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் வசீம் கான் அறிவித்துள்ளார்.

கிரிக்கட் விளையாட்டின் பங்குதாரர்கள் சகலரதும் தேவைப்பாடுகள் அதிகமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களின் பங்களிப்பிற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், தாம் அன்பளிப்பை வழங்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read next: கந்தளாய் சீனித் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை