ரசிகர்கள் இல்லாமல் போட்டி – வசிம் அக்ரம் கருத்து

Photo: facebook.com/wasimakram
ரசிகர்களை
அனுமதிக்காமல் ரி-20
உலகக் கிண்ணப்
கிரிக்கெட் போட்டியை
நடத்துவது முறையாக
இருக்காது என்று
பாகிஸ்தான் கிரிக்கெட்
அணியின் முன்னாள்
தலைவர் வசிம்
அக்ரம் தெரிவித்துள்ளார்.
16 அணிகள்
பங்குகொள்ளும் 7வது
ரி-20 உலகக்
கிண்ணக் கிரிக்கெட்
போட்டி அக்டோபர்
18ஆம் திகதி
முதல் நவம்பர்
15ஆம் திகதி
வரை அவுஸ்திரேலியாவில்
நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும்
கொரோனா வைரஸ்
அச்சுறுத்தல் காரணமாக
இந்த போட்டி
ஒத்திவைக்கப்படலாம் என
தெரிகிறது.
இந்த
நிலையில் பாகிஸ்தான்
கிரிக்கெட் அணியின்
முன்னாள் தலைவர்
வசிம் அக்ரம்
கருத்து வெளியிடுகையில்,
ரசிகர்களை அனுமதிக்காமல்
ரி-20 உலக
கிண்ண கிரிக்கெட்
போட்டியை நடத்தலாம்
என்ற யோசனை
சரியானது கிடையாது.
ரசிகர்கள் இல்லாமல்
உலக கிண்ணக்
கிரிக்கெட் போட்டியை
எவ்வாறு நடத்த
முடியும். அது
முறையானதாகவும் அமையாது
என குறிப்பிட்டுள்ளார்.
Read next: ஆறாவது இடத்திற்கு வந்தது இந்தியா